1.. சுழற்சிமுறை மேய்ச்சல்
** தற்காலிகத் தடுப்புகள் மூலம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களில் இம்முறையை பின்பற்றலாம்.
** இம்முறையில் ஆடுகள் படிப்படியாக ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்றப்படும். இவ்வாறு முழு மேய்ச்சல் நிலத்தில், மேய்ச்சல் செய்தால், மேய்ச்சல் நிலத்தின் முதல் பகுதியில் புற்கள் வளர்ந்து, இரண்டாம் மேய்ச்சலுக்குத் தயாராகிவிடும்.
** இதனால் ஒட்டுண்ணிகளின் தாக்கம் குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும்.
** மேலும் தரமான புற்கள் வருடம் முழுவதும் ஆடுகளுக்கு மேய்ச்சல் மூலம் கிடைக்க ஏதுவாகும்.
** இந்த முறையில் முதலில் குட்டிகளை மேயவிட்டு, பின்னர் பெரிய ஆடுகளை மேயவிட்டால் குட்டிகள் மேய்ந்து மீதமுள்ள அனைத்து புற்களையும் பெரிய ஆடுகள் தின்றுவிடும்.
2.. மேய்ச்சல் முறை
** வெள்ளாடுகளை திறந்த வெளி மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டு வளர்க்கும் முறையே மேய்ச்சல் முறையாகும்.
** இம்முறையில் தீவனச் செலவு குறைவு
** இம்முறையில் எல்லா வகைப்புற்களையும் நல்ல முறையில் உபயோகிப்பது அரிது. எனவே நாம் சுழற்சி முறை மேய்ச்சலைப் பின்பற்றலாம். .