சினை பருவத்தில் இருக்கும் கால்நடைகளை இந்த அறிகுறிகள் வைத்து கண்டுபிடித்து விடலாம்...

Asianet News Tamil  
Published : Jan 24, 2018, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
சினை பருவத்தில் இருக்கும் கால்நடைகளை இந்த அறிகுறிகள் வைத்து கண்டுபிடித்து விடலாம்...

சுருக்கம்

These symptoms can be traced to the livestock larvae

சினையின் பருவ அறிகுறிகள்

** மாடு அமைதியின்றிக் காணப்படும்.

** அடிக்கடி அடிவயிற்றை எக்கிக் கத்திக்கொண்டே இருக்கும்.

** அருகிலுள்ள மாடுகளின் மேல் அது தாவும். மேலும் மற்ற காளைகளோ / மாடுகளோ தன் மீது தாவ அனுமதிக்கும்.

** மந்தையாக மாடுகளை மேய்க்கும் போது, கூட்டத்திலிருந்து தனியாக ஒதுங்கி நிற்கும்.

** உடல்வெப்பநிலையின் அளவு சிறிது அதிகரித்துக் காணப்படும்.

** சிறிது சிறிதாக சிறுநீர் கழிக்கும். எருமைகளில் அதிகம் காணப்படும்.

** வாலை ஒதுக்கிக் கொண்டே இருக்கும்.

** பசுக்களின் பிறப்பு உறுப்பின் வெளி உதடுகள் தடித்தும் வழவழப்பாகவும் சிவந்தும் காணப்படும். கண்ணாடிப் போன்ற திரவம் பசுவின் பிறப்பு உறுப்பிலிருந்து வழிந்து தொங்கிக்கொண்டிருக்கும்.

** கண்களின் கருவிழிப்பார்வை விரிந்திருக்கும்.

** கறவையில் உள்ள மாடாக இருந்தால் பாலின் அளவு 2-3 நாட்களுக்குக் குறையும்.

PREV
click me!

Recommended Stories

Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!
Training: கோடிகளை ஈட்டலாம் ஈசியா.! பழங்களை இனி வீணாக்க வேண்டாம்! மதிப்பு கூட்டி லாபம் ஈட்டும் கலை இதோ.!