கால்நடைகளில் செயற்கை கருத்தரிப்பு முறை எப்போது பயன்பாட்டிற்கு வந்தது தெரியுமா?

 |  First Published Jan 24, 2018, 1:36 PM IST
When did the artificial fertilization method in cattle come to use?



செயற்கை கருத்தரிப்பு முறை 

** செயற்கைக் கருத்தரிப்பு என்பது ஆண் இனப்பெருக்க உறுப்பிலிருந்து உயிருள்ள விந்தணுக்களை சேகரித்து சரியான நேரத்தில் சரியான முறையில் பெண் இனப்பெருக்க உறுப்புடன் சேர்ப்பதே ஆகும். 

** இதன் மூலம் நாம் சாதாரண கன்றை  போலவே இளம் தலைமுறையைப் பெற முடியும். இதில் காளை மாட்டின் விந்தணுக்களைச் சோதித்து கருப்பையில் மேம்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சரியான தருணத்தில் செலுத்தி இளம் தலைமுறை பெறப்படுகிறது. 

** முதன் முதலில் 1780ல் லாஸானோ ஸ்பால்பன்சானி என்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் வளர்ப்புப் பிராணிகளில் நாயில் செயற்றைக் கருத்தரிப்புச் செய்தார். 

** அவரது விளக்கப்படி கருத்தரித்தல் விந்தணுவில் தான் நடைபெறுகிறது. விந்தணுவின் நீர்ப்பகுதியில் அல்ல என்று கூறினார். அதன் பின்பு நடந்த பல ஆராய்ச்சிகள் மூலம் இக்கருத்தரிப்பு முறை பயன்பாட்டிற்கு வந்தது.

** இச்செயற்கைக் கருத்தரிப்பு முறை கால்நடைகளில் நன்கு பயன்படுகிறது. கால்நடைகளில் தேவையான பண்புகளைப் பெற அயல்நாட்டுக் கால்நடைகளை நம் நாட்டு இனங்களுடன் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் பெறலாம். 

** ஆனால் இம்முறையில் கருத்தரிப்பு செய்யும் போது சில மரபியல் குணங்கள்  இழக்கப்படுகின்றன.

click me!