மாடு வளர்ப்பில் பண்ணைப் பொருளாதாரா பண்புகள்:
1.. பால் / மடி வற்றிய நாட்கள்
இது பால் கறப்பது நின்ற நாளிலிருந்து அடுத்தக் கன்று ஈனும் நாள் வரை உள்ள காலமாகும். முந்தய ஈற்றில் இழந்த சத்துக்களைத் திரும்ப பெற்றுக் கொள்ள சிறிது ஓய்வு தேவை. இக்காலமானது இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் இருக்கலாம். இவ்வாறு போதிய இடைவெளி இல்லையெனில் பசுவின் பால் உற்பத்தி படிப்படியாகக் குறைவதோடன்றி பிறக்கும் கன்றும், ஆரோக்கியமாக இருக்காது.
2.கன்று ஈனும் இடைவெளி
அடுத்தடுத்த இரு கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி கன்று ஈனும் இடைவெளியாகும். மாடுகளில் ஆண்டுக்கு 1 கன்றும், எருமை மாடுகளில் 15 மாதங்களுக்கு ஒரு கன்றும் ஈனுதல் வேண்டும். கன்றுகளுக்கிடையே இடைவெளி அதிகமாக இருந்தால், அதன் மொத்தம் ஈனும் கன்றுகள் எண்ணிக்கை குறையும்.
3.. இனப்பெருக்கத் திறன்
பசுவின் அதிகக் கன்றுகள் ஈனும் திறன், அதன் இனப்பெருக்கத் திறனைப் பொறுத்தது. இனப்பெருக்கத் திறன் மரபியல் குணாதிசியங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்து அமையும். பசுவின் இனப்பெருக்கத் திறனை முதல் கன்று ஈனும் வயது, அடுத்தடுத்த கன்று இடைவெளி, சினையாகும் காலம் போன்றவற்றின் மூலம் அறியலாம்.
சில மரபியல் பண்புகளால் ஒவ்வொரு கால்நடைக்கும் இத்திறன் மாறுபடுகிறது. சாதகமற்ற சூழ்நிலையில் குறைந்த பால் உற்பத்தி செய்யும் மாடுகள் அதிக உற்பத்தி உள்ள மாடுகள் அளவு பாதிக்கப்படாது.
4.. தீவனம் உட்கொள்ளும் எடுக்கும் மற்றும் உட்கிரகிக்கும் திறன்
மாடானது நிறைய தீவனம் உட்கொள்வதோடு அதை நன்கு உட்கிரகித்துப் பாலாக மாற்றும் திறனுடையதாக இருக்க வேண்டும்.
5.. நோய் எதிர்ப்பு
இந்திய இனங்கள் அயல் நாட்டு இனங்களை விட நோய் எதிர்ப்புத் திறன் மிகுந்தவையாக உள்ளன. கலப்பினச் சேர்க்கை மூலம் அயல் இனங்களில் இப்பண்பைப் பெறலாம்.