மீன்களின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் குளத்தில் இயற்கையிலேயே உற்பத்தியாகும் பல்வேறு நுண்ணுயிர்த் தாவர இனங்களும் பாசி இனங்களும் மற்றும் விலங்கின நுண்ணுயிர் மிதவை இனங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன.
இத்தகைய இயற்கை உயிரினங்களின் உற்பத்தி மண்ணிலுள்ள உரச்சத்து, அதன் கார அமிலத்தன்மை மற்றும் தண்ணீரின் தன்மைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது.
எனவே நமது குளத்தில் நமது சொந்த அனுபவங்களைக் கூட்டு மீன் வளர்ப்பில் அதிக உற்பத்தி பெற வெள்ளிக்கெண்டை இனத்தை இருப்புச் செய்வது இன்றியமையாதது. ஆனால் நடைமுறையி் வெள்ளிக்கெண்டை இனத்திற்கு குறைந்த விற்பனை விலையே கிடைப்பதால் அம்மீன் இனம் இருப்புச் செய்யப்படுவுதில்லை.
மீன் குஞ்சுகளை வாங்கும்போது நல்ல தரமான குஞ்சுகளைப் பார்த்து வாங்குதல் வேண்டும். உடல் ஊனம் வெளிப்புற காயங்கள் செதில்கள் இழந்து இருத்தல் சுறுசுறுப்பின்மை மெலிந்த நிலை ஒட்டுண்ணிகள் இருத்தல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் மீன் குஞ்சுகளை தவிர்க்க வேண்டும்.
மீன் குஞ்சுகளை மிதமான வெப்பம் நிலவும் காலை, மாலை மற்றும் முன் இரவு வேலைகளில் இருப்புச் செய்வது நல்லது. வெளிப்பண்ணைகளிலிருந்து வாங்கிச் செல்லும் குஞ்சுகளை உடனே குளங்களில் விட்டுவிடாமல் முதலில் அவற்றை நமது நீர்நிலையில் சுழலுக்கு இணங்கச் செய்தல் வேண்டும்.
பின்னர் குஞ்சுகளை 0.05 விழுக்காடு பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலிலோ 2 முதல் 3 விழுக்காடு உப்புக்கரைசலிலோ 2 முதல் 5 நிமிடக் குளியல் சிகிச்சை அளித்து பின்னர் அவற்றைக் குளங்களில் இருப்புச் செய்தல் வேண்டும்.