கறவை மாடுகள் சினைப் பருவத்திற்கு வருவதற்கு ஏற்ற வழிமுறைகள்...
** கால்நடைகளுக்கு சினைத்தருண அறிகுறி தெரியாமல் இருந்தாலும், சினைப்பருவருவத்திற்கு வருவதற்கு செய்யவேண்டியவை:
** முதல் நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு சோற்றுக்கற்றாழை மடல் ஒன்றை எடுத்து தோல் நீக்கி உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.
** அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு 1 கைப்பிடி முருங்கை இலை கொடுக்கவேண்டும்.
** அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி பிரண்டையை அரைத்து பனைவெல்லம் தொட்டு உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.
** அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து உள்ளுக்குள் கொடுக்கவேண்டும்.
** இப்படி 16 நாளைக்கு தினமும் ஒவ்வொரு பொருள்களை கொடுத்துவந்தால் அடுத்த சில தினங்களிலேயே மாடுகள் சினைப்பருவத்திற்கு வந்துவிடும்.
** சினைப்பருவத்திற்கு வந்த மாடுகளை உடன் செயற்கை கருவூட்டல் செய்து பயன்பெறலாம்.