1.. சினைப் பிடிக்காமைக்கு வேறு எதாவது காரணங்கள் இருக்கா?
அ. இனப்பெருக்க உறுப்புகளின் மாற்றம் இவை பிறப்பில் உருவானதாக இருக்கலாம் அல்லது கருப்பையில் ஏற்பட்ட நோயின் விளைவாக வரலாம்.
ஆ. இனப்பெருக்க உறுப்புகளில் நோய்
கருப்பை அழற்சி கிருமிகளால் ஏற்படுகிறது. இதன்காரணமாக சினைப்பருவ காலத்தில் ஏற்படும் திரவம் கோழை கண்ணாடிபோன்று தெளிவாக இல்லாமல் வெள்ளையாக இருக்கும். இவ்வாறு இருந்தால் அதற்கு சிகிச்சை செய்யவேண்டும்.
இ. கருமுட்டை வெளியாதலில் கோளாறுகள்.
கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவராதிருத்தல், தாமதமாக வெளிவருதல் மேலும் சூலகத்தில் கட்டி போன்றவை பசுக்கள் சினைப்பிடிப்பதற்குத் தடையாக இருக்கினறன. சூலகக்கட்டி பால் கொடுக்கும் பசுக்களிலும், அதிகப் புரதச்சத்தைப் பெறும் பசுக்களிலும் காணப்படும். இதன் காரணமாக பசுக்கள் 21 நாட்களுக்கு ஒரு முறைக்கு பதிலாக 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
2.. சந்தேகத்திற்குரிய விந்தின் தரம் என்றால் என்ன?
செயற்கை முறையில் இனவிருத்தி செய்யப்படும்போது உபயோகப்படுத்தும் விந்தின் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு விந்துக்குச்சியில் 10 மில்லியன் முன்னோக்கிய ஓட்டமுள்ள விந்தணுக்கள் இருக்க வேண்டும். குறைந்தது 30 சதவிகிதம் விந்தணுக்கள் முன்னோட்டமுள்ளவைகளாக இருக்க வேண்டும்.