முட்டையின் வடிவம் இந்த நான்கு பாகங்களைச் சேர்த்துதான் உருவாகிறது…

 |  First Published Oct 26, 2017, 12:29 PM IST
these four steps takes egg grow



 

முட்டையில் மொத்தம் நான்கு பாகங்கள் உள்ளன.

Tap to resize

Latest Videos

அவை 1. மஞ்சள் கரு

2. ஆல்புமின்

3. முட்டை ஓட்டு சவ்வு

4.முட்டை ஓடு

1.. முட்டை மஞ்சள்:

முட்டையின் மஞ்சள் கருவானது சலேசா மூலம் முட்டையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சலேசா, அடர்த்தியான அல்புமின் புரதத்துடன் ஒரு முனையில் இணைக்கப்பட்டு மறு முனையில் முட்டை மஞ்சள் கருவுடன் இணைக்கப்பட்டுள்ளது. முட்டை மஞ்சள் கருவைச் சுற்றி ஒரு நிறமற்ற வைட்டலின் சவ்வு உள்ளது.

முட்டையின் மஞ்சள் கருவில் லேட்டிபெரா எனும் அமைப்பு உள்ளது. இது முட்டையின் மையப்பகுதியில் உள்ள ஒரு உருண்டை வடிவ வெளிறிய நிறமுடைய திரவமாகும். முட்டையினை வேக வைக்கும்போது இந்த திரவம் கடினமாவதில்லை.

முட்டையின் எடையில் 30-33% மஞ்சள் கரு உள்ளது. முட்டையின் மஞ்சள் கரு உருவாகும்போது மஞ்சள் கரு வட்ட வடிவ வளையங்களாக கருவினைச் சுற்றி படிகிறது.
முட்டையின் மஞ்சள் கருவின் மையத்திலுள்ள பகுதி முட்டையின் இனப்பெருக்கப் பகுதியாகும்.

கருமுட்டை விந்துவால் கருவுற்றிருந்தால் அதற்கு பிளாஸ்டோடெர்ம் என்று பெயர், கருவுறாவிட்டால் அதற்கு பிளாஸ்டோ டிஸ்க் என்று பெயர்.

2.. அல்புமின்

அல்புமின் அல்லது முட்டை வெள்ளைக்கரு மஞ்சள் கருவினைச் சுற்றியிருக்கிறது. அல்புமினில் நான்கு அடுக்குகள் உள்ளன.

உட்பகுதி அல்லது சலாசிபெரஸ் அடுக்கு ரேன்ஸ் முட்டையின் மஞ்சள் கருவின் மத்தியிலுள்ள கருவுற்ற கருமுட்டை அல்லது பிளாஸ்டோடெர்மை ஆல்புமின் பாதுகாக்கிறது.

பிளாஸ்டோடெர்ம் முட்டை ஓட்டிற்கு அருகில் போய் அடிபடுவதை அல்புமின் தடுக்கிறது. மேலும் பாக்டீரியாக்கள் மஞ்சள் கருவிலோ அல்லது ஜெர்ம் செல்லையோ அணுகுவதையும் அல்புமின் தடுக்கிறது.

3.. முட்டை ஓட்டுச் சவ்வு

முட்டை ஓட்டின் உட்பகுதியில் இரண்டு சவ்வுகள் உள்ளன. ஒன்று உட் சவ்வு மற்றொன்று வெளிச்சவ்வாகும். வெளிச்சவ்வு முட்டை ஓட்டுடனும், உட்சவ்வு அல்புமினுடனும் இணைந்து முட்டையின் உட்பகுதியினைச் சுற்றி உள்ளது. முட்டையின் அங்கங்களிலிருந்து வாயுக்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் முட்டை ஓட்டுச் சவ்வு துணை புரிகிறது.

4.. முட்டை ஓடு

முட்டை ஓட்டில் பின்வரும் பகுதிகள் உள்ளன:

மேமில்லரி அடுக்கு, ஸ்பான்ஜி அல்லது கால்கேரியஸ் லேயர், க்யூட்டிக்கிள் அல்லது புளூம், போர் சிஸ்டம்.

கோழிகளின் இனங்களைப் பொறுத்து முட்டை ஒட்டின் நிறம் பழுப்பாகவோ அல்லது, வெள்ளையாகவோ அல்லது பச்சையாகவோ இருக்கும். பழுப்பு நிறம் ஊபோர்பைரின் எனும் நிறமியாலும், பச்சை நிறம் பிலிவர்டின் எனும் நிறமியாலும், ஏற்படுகிறது. பச்சை நிற முட்டைகள் ஆரகானா இன கோழிகள் இடுகின்றன.

click me!