** கரு முட்டைக் குழாயின் இஸ்துமஸ் பகுதியில் முட்டையின் உட்சவ்வுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த சவ்வுகள் நிறைய பின்னப்பட்ட நார்களால் ஆனவை. இவை தண்ணீர் மற்றும் காற்று உட்புக அனுமதிக்கும். மொத்தத்தில் முட்டையின் உட்பகுதியில் இரண்டு சவ்வுகள் உருவாகும்.
** ஒன்று உட்சவ்வு மற்றொன்று வெளிச்சவ்வு. முதலில் இந்த இரண்டு சவ்வுகளும் நன்றாக இணையாமல் இருக்கும். பிறகு முட்டையில் தண்ணீர் மற்றும் உப்புகளும் சேர்க்கப்பட்டு முட்டையின் முழு உருவம் உருவாகிறது.
** பிறகு முட்டை கர்ப்பப்பையினை சேர்ந்தடைகிறது. வெளிப்புற சவ்வு உட் புற சவ்வினை விட மூன்று மடங்கு தடிமன் அதிகமானது. வெளிப்புற சவ்வு 0.05 மிமீ தடிமனும், உட்புற சவ்வு 0.015 மிமி தடிமனும் ஆனது.
** இந்த இரு சவ்வுகளும் ஒன்றாக ஒட்டிக்கொண்டு இருக்கும். ஆனால் முட்டையில் காற்றுப் பை பகுதியில் மட்டும் இவை இரண்டும் பிரிக்கப்பட்டிருக்கும்.
** கோழிகள் முட்டையினை இடும்போது அதிலுள்ள காற்றுப்பைகள் சிறிதாக இருக்கும், பிறகு நாளாக நாளாக காற்றுப்பையின் அளவு அதிகரிக்கும். இப்படியே உட்சவ்வு உருவாகிறது.