உண்மையில் கோழி முட்டையின் மஞ்சள் கருவானது கோழிகளின் இனப்பெருக்க அணு அல்ல. ஆனால், கருவிற்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய ஒரு பகுதியாகும்.
undefined
பெட்டைக் கோழிகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைந்தவுடன் அவற்றின் கரு முட்டைப் பையும், கருக்குழாயும் பல்வேறு விதமான வளர்ச்சியினை அடையும். முதல் முட்டை இடுவதற்கு 11 நாளுக்கு முன்னால் கோழிகளின் உடலில் பல்வேறு விதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்.
கோழிகளின் பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதியிலிருந்து எப்.எஸ்.எச் என்னும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோனின் விளைவாக கருமுட்டைப் பையில் கருமுட்டைகளில் வளர்ச்சி ஏற்பட்டு அவை அளவில் அதிகரிக்கும்.
மேலும், செயல்படத் தொடங்கிய கருமுட்டைப் பையும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், டெஸ்டோஸ்டீரோன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்யும்.
இரத்தத்திலுள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கோழிகளின் எலும்பு மஜ்ஜையில் புரத உற்பத்தி, கல்லீரலில் கொழுப்புகள் உற்பத்தி, கருமுட்டைக் குழாயின் அளவு அதிகரித்து அதில் அல்புமின் புரதங்களின் உற்பத்தி, கோழி முட்டையின் ஓட்டின் உட்பகுதி சவ்வுகள் போன்றவற்றை உற்பத்தி செய்யத் தூண்டும்.
கருவினைச் சுற்றி மஞ்சள் கரு படிய ஆரம்பிக்கும். ஒரு மஞ்சள் கரு முதிர்ச்சியடைய 10 நாட்களாகும். கருவினைச் சுற்றி மஞ்சள் கரு படிவது மிக மெதுவாக இருக்கும். மேலும் அதன் நிறம் வெளிறியதாகவும் காணப்படும்.
முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள நிறமி ஸான்தோஃபில் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்திலிருந்து பெறப்படுகிறது. முதலில் இந்த நிறமி தீவனத்திலிருந்து இரத்தத்திற்குச் சென்று பிறகு மஞ்சள் கருவிற்கு செல்லுகிறது.
அதிக அளவிலான கரோட்டினாய்டு நிறமிகள் மஞ்சள் கருவின் மத்தியிலிருந்து அதன் வெளிப்பகுதியிலிருந்து படிய ஆரம்பிக்கிறது. பிறகு முழு மஞ்சள் கருவும் உருவாகி முட்டையானது கருமுட்டைப் பையின் கடைசிப் பகுதியில் சென்று சேர்கிறது.
சலேசா புரதம் அவற்றின் எதிர்ப்புறத்தில் முறுக்கி முட்டை இட்டவுடன் மஞ்சள் கருவினை முட்டையின் மத்தியில் வைக்கிறது. இதுவே மஞ்சள் கரு உருவாகும் விதம்.