கோழிகளைப் பிடிக்கும் போது அவற்றைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தும் கொக்கிகளை அவற்றின் காலில் போட்டோ அல்லது அவற்றின் கால்களை நம் கைகளால் பிடித்தோ தூக்கவேண்டும்.
கோழிகளை எப்போதும் அவற்றின் கழுத்தைக் கொண்டோ அல்லது இறகுகளைப் பிடித்தோ தூக்கக்கூடாது. அவற்றுக்கு மருந்து அளிப்பது போன்ற இதர செயல்முறைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக கோழிகளை பிடித்து நம் கைகளில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அப்போது கோழிகளின் இறகுகளைப் பிடித்திருப்பதால் அவற்றின் இயக்கம் தடை செய்யப்படுகிறது.
கூண்டுகளிலிருந்து கோழிகளை எடுக்கும் போது, அவற்றின் தலையை கழுத்துடன் சேர்த்து முதலில் வெளியே வருமாறு அவற்றின் உடலை இறக்கைகளுடன் சேர்த்து நம்முடைய இரண்டு கைகளால், கோழிகளுக்கு காயம் ஏற்படாமல் எடுக்கவேண்டும்.
இதே செயல்முறையினை கோழிகளை கூண்டுக்குள் போடும் போது பின்பற்றவேண்டும். அதாவது தலை முதலில் கூண்டுக்குள் போகுமாறு வைத்து பிறகு அவற்றின் உடல் உள்ளே போகுமாறு போட வேண்டும்.
கோழிகளை பரிசோதிப்பதற்காகப் பிடிக்கும்போது அவற்றின் அடி வயிற்றுப்பகுதி நம்முடைய உள்ளங்கையில் இருக்குமாறு வைத்து அவற்றின் இரண்டு கால்களையும் நம்முடைய விரல்களால் நன்றாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வைக்கும்போது கோழிகளின் தலை பரிசோதிப்பவரை நோக்கி இருக்குமாறு நம்முடைய கையில் வைக்க வேண்டும்.
ஒரு கையால் கோழியைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் நாம் அவற்றைப் பரிசோதிக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கோழிகளைப் பரிசோதிக்கும் போது கோழிகளுக்கு அயற்சி எதுவும் ஏற்படாமல் மென்மையாகக் கையாளுவதால் அவை உதறுவதைத் தடுக்கலாம்.