கொண்டையை வைத்துகூட கோழி இனங்களை வகைப்படுத்தலாம். எப்படி?

 |  First Published Oct 25, 2017, 12:36 PM IST
types of chickens breeds with bun



 

கோழியினங்களின் கொண்டைகளின் பல்வேறு வகைகள்

Tap to resize

Latest Videos

கோழிகளின் தலையின் மேல் பகுதியிலுள்ள சதைப்பகுதி அதன் கொண்டையாகும். கோழிகளின் இனத்திற்கேற்றவாறு அவற்றின் கொண்டை அமைப்பு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

கோழிகளின் கொண்டை அமைப்பு அவற்றின் மரபுப்பண்புகளைப் பொறுத்து இருக்கும். ஆனால் கொண்டையின் அளவு அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியைப் பொறுத்தும், எவ்வளவு ஒளியில் அவை வளர்க்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தும் இருக்கும்.

பல்வேறு வகையான கோழிகளின் கொண்டை அமைப்புகள் பின்வருமாறு.

1.. தனியான கொண்டை அமைப்பு:

கோழிகளின் கொண்டை அமைப்பானது, அதை முன்னாலிருந்து பார்க்கும் போது குறுகியதாகவும், அதிலிருந்து கொம்புகள் போன்று நீட்டிய அமைப்புகளும் இருக்கும். அதாவது ஒரு பிளேடு போன்ற தட்டையான அமைப்பில் விளிம்புகளுடன் கூடிய கோழிகளின் தலை மீது இருக்கும் சதைப்பகுதி அதன் கொண்டையாகும்.

கோழிகளின் கொண்டையிலுள்ள கத்தி போன்ற வெட்டுப்பட்ட அமைப்புகளின் எண்ணிக்கை கொண்டைகளின் வகைக்கேற்ப மாறுபடும். மேலும் கோழிகளின் கொண்டையிலுள்ள இந்த அமைப்புகள் கோழிகளின் இனத்திற்கேற்ப வேறுபடும்.

வெள்ளை லகான் கோழிகளின் கொண்டையில் 5 வெட்டுப்பட்ட அமைப்புகளும், ஆர்ஐஆர் மற்றும் மைனார்கா இனக் கோழிகளின் கொண்டைகளில் 6 வெட்டு அமைப்புகளும் இருக்கும்.

ரோஸ் மற்றும் பீ கொண்டை அமைப்புகளின் கீழ்ப்பட்ட கொண்டை அமைப்பு தனிக் கொண்டை அமைப்பாகும்.

2.. பீ எனும் கொண்டை அமைப்பு

இந்த கொண்டை அமைப்பு மூன்று கொண்டை அமைப்பாகும். அதாவது மூன்று தனிக்கொண்டைகள் அவற்றின் அடிப்பகுதியில் சேர்ந்தது போலும், மேற்பகுதியில் மூன்றாக பிரிந்து இருப்பது பீ எனும் கொண்டை அமைப்பாகும்.

இந்த மூன்று கொண்டைகளில் நடுவிலுள்ள கொண்டை மற்ற இரண்டை விடப் பெரியதாக இருக்கும். சுத்தமான பிரம்மா கோழி இனங்களில் இந்த வகைக் கொண்டை அமைப்பு இருக்கும்.

3.. ரோஸ் கொண்டை

இக் கொண்டை அமைப்பு அகன்ற கொண்டையாக, அதன் மேற்பகுதியில் தட்டையாகவும் சிறிய செவ்வக வடிவ அமைப்புகளும் இருக்கும். இந்த செவ்வக வடிவ கத்தி போன்ற அமைப்புகளின் நீளமும் அகலமும் கோழிகளின் இனத்திற்கேற்ப மாறுபடும்.

4.. ஸ்ட்ராபெரி அல்லது வால்நாட் கொண்டை அமைப்பு

இந்த வகைக் கொண்டை அமைப்பு ஸ்ட்ராபெரி பழத்தின் அரைப்பகுதி போன்று இருக்கும். கொண்டையின் மேற்பகுதி ஸ்ட்ராபெரி பழத்தின் மேற்பகுதி போன்று இருக்கும். இது சிறியதாகவும் அவற்றின் மேற்பகுதியில் ஒழுங்கற்ற கோடுகள் போன்ற அமைப்புகள் இருக்கும்.

ரோஸ் மற்றும் பீ கொண்டை உடைய கோழிகளை கலப்பினம் செய்யும்போது கிடைக்கும் கலப்பினக் கோழிகள் அனைத்தும் வால்நட் கொண்டையினைப் பெற்றிருக்கும். இதற்கு ஆர் மற்றும் பி ஜீன்களின் சேர்ந்த வெளிப்பாடாகும்.

5.. வி வடிவ கொண்டை அல்லது டியூப்லெக்ஸ் அல்லது கொம்பு வடிவ கொண்டை

இந்தக் கொண்டை கொம்பு போன்று இருக்கும். ஆனால் பொதுவாக இந்த கொண்டை அமைப்பு ஆங்கில எழுத்து 'வி' போன்று இருக்கும். இந்த கொண்டையானது கோழிகளின் அலகிலிருந்து ஆரம்பித்து இரண்டாக பிரிந்து, அதன் அடிப்பகுதியில் தடிமனாகவும், மேல் பகுதியில் கூர்மையாக, மெல்லியதாகவும் இருக்கும்.

6.. குஷன் கொண்டை 

இந்த கொண்டை அமைப்பு உருண்டையான சதை அமைப்புடன் அதன் மீது கூர்மையான அமைப்புகள் இருக்கும். இக்கொண்டையின் மத்தியில் நீண்ட பள்ளம் காணப்படும்

7.. குவளை கொண்டை

இந்த கொண்டை அமைப்பு ஒரு தேநீர் குவளையைப் போன்று அதன் விளிம்புகளில் கத்தி போன்ற அமைப்புகள் இருக்கும்.

click me!