கலப்பின கோழியினங்கள்
இந்த கோழியினங்கள் பல்வேறு விதமான தூய கோழினங்களை இரண்டு, மூன்று மற்றும் நான்கு முறை கலப்பினம் செய்து உருவாக்கப்படுகின்றன.
இவை வணிக ரீதியாக முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கு வளர்க்கப்படுகின்றன.
இவற்றின் முட்டையிடும் மற்றும் வளரும் திறன் அதிகம்.
இவற்றின் கலப்பின வீரியம் அதிகம்.
1.. பொதுவாக முட்டைக்காக வளர்க்கப்படும் கலப்பின கோழியினங்கள்:
பிவி 300, ஐஎஸ்எ பாப்காக், போவன்ஸ், யூரிபிரீட், ஹைலைன், டெகால்ப், லோமேன், கீஸ்டோன், எச் & என் நிக் சிக் போன்றவை.
2.. பொதுவாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் கலப்பின கோழியினங்கள்:
காப், ராஸ், ஹப்ரோ, ஹப்பார்ட், ஸ்டார்புரோ,ஏவியன் 34, அனாக் 2000, ஆர்பர் அக்ர்ஸ், ஹப் சிக்ஸ், பீட்டர்சன் போன்ற இதர இனங்கள்.