** கோழியின் கர்ப்பப்பை அல்லது முட்டை ஓடு சுரக்கும் பகுதியில் முட்டை நீண்ட நேரம் இருக்கும். அங்கு முட்டை ஓடு உருவாகும். முட்டை ஓடு உருவாவதற்கு 19 முதல் 20 மணி நேரம் ஆகும்.
** முட்டை ஓடானது கால்சியம் கார்பனேட், புரதம், மியூக்க பாலி சாக்கரைட் கலந்த கலவையால் ஆனது. முட்டை ஓட்டின் உட்சவ்வு முட்டை ஓட்டின் உட்பகுதியுடன் ஒட்டியிருக்கும்.
** முட்டை ஓடானது, முட்டையின் உட்சவ்வுடன் பேசல் கேப் எனும் பகுதியால் இணைக்கப்பட்டிருக்கும். பேசல் கேப் பகுதி முட்டை ஓட்டின் உட்புறப் பகுதியாகும். முட்டை ஓட்டின் பெரும்பாலான பகுதி பேலிசேட் அல்லது காலம் எனும் மிகச்சிறிய ஓட்டைகள் நிறைந்த அமைப்பால் ஆனது.
** முட்டை ஓட்டின் கடைசிப் பகுதி கியூட்டிகிள் எனப்படும். இது முட்டையினை சுற்றி இருக்கும் ஒரு கரிமப்பொருளாகும். கியூட்டிக்கிள் பகுதி முட்டை ஓட்டில் இருக்கும் மிகச்சிறிய துளைகளை அடைத்து விடுவதால் முட்டையிலிருந்து அதிகப்படியான ஈரப்பதம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
** மேலும் பாக்டீரியாக்கள் முட்டையினுள் உட்செல்வதும் தடுக்கப்படுகிறது.