இந்த நான்கு நோய்களும் ஆடுகளை வெகுவாக தாக்கும் நோய்கள்…

 |  First Published Sep 25, 2017, 12:51 PM IST
These four diseases can cause diseases of the goats ...



1.. லெப்டோ ஸ்பைரோஸிஸ்

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குக் காய்ச்சல், ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை, ரத்தம் கலந்த சிறுநீர் மாதிரியான அறிகுறிகள் தென்படும். சிறுநீர் வழியே வெளியேறுகிற நோய்க்கிருமிகள் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் ரொம்ப நாட்களுக்குத் தங்கியிருக்கும். அது மூலமா, மத்த ஆடுகளுக்கும், மனிதர்களுக்கும்கூட இந்நோய் பரவும். அதனால் சதுப்பு நிலங்கள்ல ஆடுகளை மேய்க்காமல் இருக்கறது நல்லது. ஆரம்ப நிலையிலேயே நோய்க்கு சிகிச்சை கொடுத்து காப்பாத்திடலாம்.

Tap to resize

Latest Videos

2.. ஜோனிஸ்

'மைக்கோ பாக்டீரியம் பேரா ட்யூபர்குளோசிஸ்’ என்ற நுண்கிருமியால் ஜோனிஸ் எனும் நோய் ஏற்படும். இந்தக் கிருமிகள் குட்டி ஆடுகளோட உடம்புக்குள்ள போய், ஆடு வளர்ந்த பிறகு நோயை உண்டாக்கும். பாதிக்கப்பட்ட ஆடுகள் மூலமா மனிதர்களுக்கும் பரவும்.

ஆடுகளோட குடல் பகுதியைத் தாக்கி நோய் உண்டாக்கறதால, தொடர்ந்து துர்நாற்றத்தோட வயிற்றுப்போக்கு இருக்கும். உடல் மெலிஞ்சுக்கிட்டே வரும். சில சமயங்களில் உடம்புல வீக்கம் இருக்கும். அப்படியே இருந்து இறந்துடும். இதை தடுப்பூசி மூலம் தடுத்திடலாம்.

3.. குளம்பு அழுகல்

'ப்யூசிபார்மிஸ் நோடோசஸ்’ என்ற நுண்கிருமியால் குளம்பு அழுகல் ஏற்படும். கொட்டகையில சகதி இருந்தா, கிருமிகள் பரவி ஆடுகளோட குளம்புப் பகுதியைத் தாக்கி புண் வரும். அந்த புண்கள்ல ஈக்கள் முட்டை வைக்கறதால புழுக்கள் உண்டாகும். அதனால ஆடுகள் நிக்க முடியாம மண்டி போட்டு மேயும். அதனால உடல் இளைச்சு ஆடுகள் இறந்துடும்.

கொட்டகையை சகதி இல்லாம காய்ஞ்ச நிலையில பராமரிக்கணும். ஆடுகளோட குளம்புல புழுக்கள் இருந்தா.. அதை நீக்கி 'டர்பன்டைன்’ எண்ணெயை பஞ்சில் நனைச்சு கட்டுப்போடணும். கால்களைச் சுத்தமாகக் கழுவி, கிருமிநாசினியைத் தடவணும். துத்தநாகக் கலவையை 5 முதல் 10 சதவிகிதம் தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட கால்களை நனைக்கணும்.

4.. ரண ஜன்னி

'டெட்டனஸ்’ எனப்படும் ரண ஜன்னி நோய், 'கிளாஸ்டிரீடியம் டெட்டனி’ என்ற நுண்கிருமியால வருது. நிலத்தில் இருக்குற கிருமிகள்... காயங்கள் மூலமா உடம்புக்குள்ள புகுந்து நஞ்சை உண்டு பண்ணும். இந்த நஞ்சு ரத்தத்தில் கலந்தவுடன் நோயின் அறிகுறிகள் தென்படும். முதல்ல கால்கள் விரைக்கும். தசைகள்ல நடுக்கம் வரும். தலை ஒரு பக்கமாக திரும்பி, தாடைகள் இறுகிடும்.

வாயைத் திறக்க முடியாது. வாயிலிருந்து உமிழ்நீர் வடிஞ்சுக்கிட்டேயிருக்கும். மூச்சுவிட சிரமப்படும். மலச்சிக்கல் இருக்கும். சிறுநீர் விடாது. நோய்கண்ட மூணுலருந்து... நாலு நாட்கள்ல ஆடு இறந்துடும். இந்த நோயைக் கட்டுப்படுத்த, ஆடுகளுக்கு முடிவெட்டும்போதோ, அல்லது காயடிக்கும் போதோ காயங்கள் வராமப் பாத்துக்கிடணும். ஏதாவது காயம் வந்தா, 'டெட்டனஸ் டாக்ஸாய்டு’ தடுப்பூசி போடணும். காயத்தை சுத்தம் செஞ்சு மருந்து போடணும்.

click me!