பஞ்சகவ்யம்
பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும்.
பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக் கலவை.
இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நில ஊட்டப் பொருள் ஆகும்.
பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் -
1.. சாணம் 2.. கோமியம் 3.. பால் 4.. நெய் 5.. தயிர்
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம்.
இது வேளாண்மை பயிர் பாதுகாப்பபில் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தயாரிப்பு முறை:
தேவையான பொருட்கள்
1. பசுஞ்சாணம்-5 கிலோ,
2. பசுவின் கோமியம்-3 லிட்டர்,
3. பசும்பால்-2 லிட்டர்,
4. பசு தயிர்-2 லிட்டர்,
5. பசு நெய்-1 லிட்டர்,
6. கரும்புச்சாறு-1 லிட்டர்,
7. தென்னை இளநீர்-1 லிட்டர்,
8. வாழைப்பழம்-1 கிலோ.
செய்முறை
1.. பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.
2.. நான்காவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.
3.. ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.
பயன்பாடு
1. பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.
2. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.