1.. கருப்பாடு:
இது காவெரிக்குக் கீழ்ப்பாகுதிகளான சேலம், ஓமலூர், மேச்சேரி,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தொட்டியம் பகுதிகளில் காணப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.
பஞ்சம் தாங்குதல் மற்றும் நொய் எதிர்ப்பில் முதல் தரம். பலிபூசைகளுக்கு விரும்பி வாங்கப்படும் இனம்.அட்டப்பாடி பகுதியில் குறும்பர், இருளர் வளர்க்கும் ஆடுகள் இவ்வினத்தோடு தொடர்புடையவை. நல்ல குட்டிகள் ஈனும் திறன் உடையவை.
2.. பள்ளை ஆடு
இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். 'குள்ள ஆடு’, 'சீனி ஆடு’னும் சொல்வாங்க. சின்னக்கொம்பும், மூழிக்காதும் இதோட அடையாளம். குட்டிகள் பிறக்கும்போது கால் குட்டையாவும் உடம்பு அகலமாவும் இருக்கும். இந்த இனம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலா இருக்கு. இந்த ஆடுகளும் ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். இவை பலவகையான நிறத்துடன் இருக்கும்