தென்னையில் குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பின்வருபவைதான் காரணங்கள்...
அ) அதிக கார அல்லது அமில நிலை
ஆ) வடிகால் வசதி இல்லாமை
அ) மண்ணின் கார அமிலத்தன்மையை சரிசெய்தல்
மண்ணின் அதிகப்படியான கார அல்லது அமிலத்தன்மை குரும்பை உதிர்வதற்கான காரணமாக இருக்கலாம்.
மண்ணின் கார அமில நிலை 5.5க்கும் குறைவாக இருப்பது அதிக அமில நிலைக்கான அறிகுறியாகும்.
இதனை சுண்ணாம்பு சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம்.
கார அமில நிலை 8.0க்கும் அதிகமாக இருப்பது மண்ணில் அதிகமான காரத்தன்மையைக் குறிக்கும்.
இதனை ஜிப்சம் சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம்.
ஆ) போதுமான வடிகால் வசதி அமைத்தல்
தென்னை மரங்களில் நீர் வடிகால் வசதி இல்லாவிட்டால், அதன் வேர்கள் காற்றில்லாமல் மூச்சுவிட முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் குரும்பைகள் உதிரும்.
உரிய இடங்களில் வடிகால் வாய்க்கால்களை அமைத்து மழைக்காலத்தில் எஞ்சிய நீலை வெளியேற்றவேண்டும்.