தடுப்பூசி அளிக்கும் உபகரணங்கள்
1. மருந்தூசி ஊசியுடன் அல்லது தடுப்பூசி சொட்டு அளிப்பான்
இதைக்கொண்டு நாசித்தூவரங்களிலும் கண்களிலும் தடுப்பூசி மருந்துகளை அளிக்கலாம்.
2. தானியங்கி தடுப்பூசி அளிப்பான்
இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக கோழிகளுக்கு கண்கள் மற்றும் மூக்கின் வழியே தடுப்பூசி மருந்துகளை இடமுடியும்.
3. கோழி அம்மை தடுப்பூசி அளிப்பான்
இறக்கையில் தோலுக்கடியில் தடுப்பூசி மருந்துகளை இட இது உபயோகமாக இருக்கிறது.
4. அலகு வெட்டி
மின்சாரத்தால் இயங்கும் இதைக்கொண்டு கோழியின் அலகை வெட்டி கோழிகள் கொத்திகொள்ளுவதை கட்டுப்படுத்தலாம்.
இது 2 அல்லது 2.5 அடி உயரமுள்ள தூண் மீது பெடல் போன்ற அமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும்.பெடலை கால் மூலம் அழுத்தினால் சூடாக்கப்பபட்ட தகடு கோழியின் அலகை வெட்டுமாறு அமைக்கபட்டிருக்கும்.
தகட்டின் சூட்டை கட்டுபடுத்த ஒரு அமைப்பும் இந்த கருவியில் உள்ளன.