கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு தண்ணீர் அளிக்கும் இந்த உபகரணங்களை வைத்திருப்பது அவசியம்...

 
Published : Dec 01, 2017, 12:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு தண்ணீர் அளிக்கும் இந்த உபகரணங்களை வைத்திருப்பது அவசியம்...

சுருக்கம்

Poultry farmers need to keep these equipment supplying water to chickens ...

கோழிகளுக்குத் தண்ணீர் அளிக்கும் உபகரணங்கள்

1. தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள்

தண்ணீரில் கலந்துள்ள அதிகமாக திடப்பொருள்களால் ஈரப்பத கட்டுபாட்டு கருவிகள், தெளிப்பான் துளைகள், ஜெட்கள், மற்றும் வால்வுகள் போன்றவற்றில் படிவங்கள் ஏற்பட்டு அதன் செயல்பாடுகளை குறைக்கின்றன.

தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தண்ணீரில் உள்ள மொத்த கரைந்துள்ள திடப்பொருள்களின் அளவை குறைக்கலாம். இந்த தண்ணீர் பிறகு குஞ்சு பொரிப்பகத்திற்கு உபயோகப்படுத்தபடுகிறது.

2. தண்ணீர் சூடாக்கிகள்

வெந்நீர் குஞ்சுப்பொரிப்பக தட்டு கழுவிகள் மற்றும் பொதுவான சுத்தம் பண்ணுவதற்கு தேவைப்படுகிறது.

பெரிய அளவு பாய்லர் தண்ணீரை சூடாக்க பயன்படுத்தபடுகிறது.

தண்ணீர் தொட்டிகள்

தண்ணீர் தொட்டிகள் மற்றும் தண்ணீர் குடிப்பான்கள் கோழிகளுக்கு தண்ணீர் வைக்க பயன்படுத்தபடுகிறது. இவைகள் வெவ்வேறு அளவு மற்றும் அமைப்புகளில் கிடைக்கின்றன.

1. தட்டு மற்றும் குடுவை அமைப்பு

குடுவை போன்ற அமைப்பில் தண்ணீர் நிரப்பி வட்டமான தட்டு போன்ற அமைப்பில் வைத்து கோழிகளுக்கு அளிக்கப்படுகிறது.

2. நீளமான மற்றும் கால்வாய் தண்ணீர் தொட்டிகள்

இவைகள் பொதுவாக கூண்டுகளில் பொறுத்தபட்டு இடைவிடாத தண்ணீர் வசதி செய்யப்படுகிறது.

ஒரு முனையில் புனல் போன்ற அமைப்பின் மூலம் தண்ணீர் நிரப்பவும் மற்றோரு முனையில் நீரை வெளியேற்ற தேவையான வசதியும் இருக்கிறது.

3. தண்ணீர் பேசின்கள்

பேசின்கள் வெவ்வேறு விட்டளவுகளில் கிடைக்கின்றன. ( 10, 12,14 மற்றும் 16 அங்குலம்) 

தனியாக தடுப்புகள் இருப்பதால் கோழிகள் தண்ணீருக்குள் செல்லுவது தடுக்கப்படுகிறது.

4. பெல் வகை தானியங்கி தண்ணீர் அளிப்பான்கள்

கடினமான பிளாஸ்டிக்கினால் ஆன இவைகள் இதற்கென அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் தொங்கவிடப்படுகிறது.

இதில் தண்ணீர் செல்லும் அளவை கட்டுபடுத்துவதற்கு என தனியாக அமைப்பு உள்ளதால் அதன் மூலம் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்ளமுடியும்.

இதில் தொடர்ச்சியாக தண்ணீர் செல்லும் வசதி இருப்பதால் நாள்முழுவதும் கோழிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது.

இந்த தண்ணீர் அளிப்பான்களின் உயரத்தையும் தண்ணீர் செல்லும் அளவையும் மாற்றுவதற்கான அமைப்புகள் இதில் உள்ளன.இந்த பிளாஸ்டிக் தண்ணீர் அளிப்பான்கள் பளபளக்கும் வண்ணங்களில் (சிவப்பு மற்றும் நீலம்) இருப்பதால் கோழி மற்றும் குஞ்சுகள் இவற்றால் கவரப்படுகிறது.

பெல் வகை தண்ணீர் அளிப்பான்களின் எண்ணிக்கை =1.3*(சுற்றளவு ÷ தண்ணீர் குடிக்கும் இடஅளவு)

5. நிப்பிள் தண்ணீர் அளிப்பான்

இது ஆழ்கூளமுறை மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் பயன்படுத்தபடுகிறது.

ஆழ்கூள முறையில் நிப்பிளுக்கு கீழே கிண்ணம் அமைத்து அதன் மூலம் ஆழ்கூளம் ஈரமாவது தடுக்கப்படுகிறது.

நிப்பிளை அழுத்தும் போது அதில் இருந்து தண்ணீர் வெளியே வரும்.

ஒவ்வொரு கூண்டுக்கும் ஒரு நிப்பிள் அமைத்தால் அது 3 முட்டைக்கோழிகளுக்கு போதுமானது.

6. கையால் நிரப்பப்படும் தண்ணீர் அளிப்பான்கள்

இளங்குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் இது அதிகமாக உபயோகப்படுத்தபடுகிறது.

இதில் துளையிலிருந்து ஊற்றுப்போல நீர் வருவதால் இதை ஊற்று தண்ணீர் அளிப்பான்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
இதில் மருந்துகள் மற்றும் டானிக்கள் ஆகியவற்றை சுலபமாக கோழிக்குஞ்சுகளுக்கு அளிக்கலாம்.

இவைகள் சிவப்பு மற்றும் நீலம் வண்ணங்களில் கிடைக்கின்றன.

தண்ணீர் தொட்டிகள் மற்றும் தீவனத் தொட்டிகளுக்கு இடையே உள்ள இடவெளி 0.6 மீ இருக்குமாறு அமைக்கவேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?