மாடு சினை நிற்வில்லை என்றால் இந்த எளிய நாட்டு வைத்திய முறையைக் கடைப்பிடிக்கலாம்ம்.
1) ஒரு வாரம் அதிகாலையில் ஆறு மணிக்கு வெறும் வயிற்றில் மாட்டிற்கு 4 டேபிள்ஸ்பூன் சீரகத்துடன் கருபட்டியை கலந்து கொடுக்க வேண்டும். இதை ஒரு வாரம் அதிகாலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வர வேண்டும்.
2) அடுத்த வாரம் சோத்துக் கத்தாழை இரண்டு மடல் வெறும் வயிற்றில் மாட்டிற்கு கொடுக்க வேண்டும். இதை ஒரு வாரம் செய்ய வேண்டும்.
3) அதற்கு அடுத்த வாரம் பெரண்டை ஒரு கைப்பிடி வெறும் வயிற்றில் மாட்டிற்கு கொடுக்க வேண்டும். இதை ஒரு வாரம் செய்ய வேண்டும்
4) கடைசி ஒரு வாரம் முருங்கை இலை அல்லது கருவேப்பிலை இரண்டு கைப்பிடி கருபட்டியுடன் கலந்து வெறும் வயிற்றில் மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.