1.. நூறு சதவீதம் கண்டீப்பாக கலப்பினங்களை தவிர்த்து விடவும்.
2. சாஹிவால் / கிர் / ரெட் சிந்தி / தார்பார்க்கர் / காங்ராஜ் / ரத்தி போன்ற நாட்டு மாட்டு இனங்கள் 8 முதல் 15 லிட்டர் பால் தரக்கூடிய வட மாநில இனங்களை தெரிவு செய்யவும்.
3.. கட்டாயம் மாடுகளை வாங்கி பண்ணை அமைக்கும் முன் பல முன்னோடி நாட்டு மாட்டு பண்ணைகளை நேரில் சென்று அவர்களின் முழு அனுபவ பகிர்வை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
4.. முதலில் ஐந்து எண்ணிக்கை ஆரம்பித்து ஆறு மாதம் கழித்து 5 எண்ணிக்கை என உயர்த்தவும்.
5.. நாட்டு மாட்டின் பாலுக்கு இன்றும் இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கிஉண்டு.
6.. பால் விற்பனையோடு நின்றுவிடாமல் பாலை மதிப்பு கூட்டி தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் பன்நீர் போன்றவை செய்து விற்றால் மிகுதியான லாபம்.
7.. அதோடு மட்டுமல்லாமல் நாட்டு பசுவின் சாணம் மற்றும் சிறு நீர் மூலம் இயற்கை இடுபொருகளான பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போன்றவை தயாரித்து விற்பனை செய்யலாம்.
8.. சாணத்தில் இருந்து விபூதி, சாம்பிராணி மற்றும் ஆர்க் சோப்பு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கலாம்.
9.. முடிந்தவரை மாடுகளின் எண்ணிக்கை பத்து முதல் இருபதுக்குள் வைத்துகொள்வது சிறப்பு.
10.. வடமாநிலங்களில் மாடுகள் வாங்கும் போகும் முடிந்தவரை அங்கு நன்கு பழக்கமானவர்களை அழைத்துச் செல்லவும்.
11.. கட்டாயமாக மாடுகளை எடுத்துவருவதற்கான அனுமதியை முறையாக பெற்று எடுத்துவரவும்.
12.. வீண்விவாதங்களை மற்றும் அநாகரீகமற்ற பேச்சுகளை மாடு வாங்கும் இடத்தில் தவிர்க்கவும்.
13. மாடுகள் விலை முடிக்கும் முன்பு உள்ளூர் மருத்துவரை அலைத்து மாடுகளை பரிசோதனை செய்த பின்னர் வாங்கவும்.
14.. மாடுகளை விலை முடிந்தவுடன் அதற்கு ஏதாவதொரு அடையாளக்குறிகளை இடவும்.
15.. முடிந்தவரை கன்று ஈன்றுள்ள மாடுகளை மூன்று நேரம் நீங்கலே பால் கரந்து பார்த்து வாங்கவும். முடிந்தவரை சினை மாடுகள் வாங்குவதை தவிர்க்கவும்.