பூச்சிகளிடம் இருந்து வெண்டையை காப்பாற்ற இவ்வளவு வழிகள்  இருக்கு...

 |  First Published Jun 27, 2018, 2:30 PM IST
There are so many ways to save the dirt from pests ...



பூச்சிகளிடம் இருந்து வெண்டையை காப்பாற்ற...

** ஜூன் – ஜூலை பருவத்தில் மஞ்சள் நரம்பு தேமல் தாங்கி வளரக்கூடிய இரகங்கள் ஆன மாக்மலி, துளசி, அனுபாமா மற்றும் சன் – 40 போன்ற இரகங்களை விதைக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

undefined

** தண்டு மற்றும் காய் துளைப்பானின் பொறி பயிராக சோளம்/மக்காசோளத்தை, வெண்டையை சுற்றி வளர்க்க வேண்டும்.

** வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க ஒட்டும் பொறி அல்லது டெல்டா பொறியை இடவும்.

** பறவைகள் புழுக்கலை தின்னும் வகையில், பறவை இருக்கைகளை ஒரு எக்டருக்கு பத்து என்ற வீதத்தில் இடவும்

** இலை தத்து பூச்சி, வெள்ளை ஈ, சிலந்தி மற்றும் அசுவனியை கட்டுபடுத்த 5% வேப்பங்கொட்டை சாறு கரைசலை 2-3 முரை பூச்சிகொல்லி தெளிப்பதற்கு இடையிடையே தெளிக்கவும்.

** இலை தத்து பூச்சி மற்றும் ஏனைய உறிஞ்சும் பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதத்தை உண்டாக்கும் அளவுக்கு மேல் இருப்பின், (5 பூச்சி/ செடி), ஒரு ஹெக்டருக்கு 150 மில்லி, இமிடாகோலோபிரிட் 17.85 SL தெளிக்க வேண்டும்.

** காய்ப்புழுக்களின் (இரியாஸ் விட்டல்லா) அந்து பூச்சிகளை மொத்தமாக பிடிப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 2 என்ற வீதத்தில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். 15-20 நாள் இடைவெயியில் கவரும் பொருளை மாற்ற வேண்டும்.

** முட்டை ஒட்டுண்ணியான டிரைகோகிராமா கிலோனியை, (1-1.5 இலட்சம்/ஹெக்ட்ர்) விதைத்த 30-35 நாளில் வார இடைவெயியில் 4-5 முறை தண்டு மற்றும் காய் துளைப்பான் கட்டுப்பாட்டிற்கு இடவும். 

** தண்டு மற்றும் காய் துளைப்பானின் எண்ணிக்கை பொருளாதார சேத நிலையின் எண்ணிக்கையை (5.3% பாதிப்பு) கடந்தால் ஒரு ஹெக்டருக்கு 200 கிராம் சைபர்மெத்ரீனை தெளிக்க வேண்டும்.

** மஞ்சள் நரம்பு தேமல் நோய் தாக்கிய செடிகளை உடனடியாக நீக்க வேண்டும்

** பாதிக்கப்பட்ட தண்டு மற்றும் காய்களை நீக்கி அழிக்க வேண்டும்.

** தேவையான நேரத்தில் பின்வரும் இரசாயண உரங்களை தத்துபூச்சி, அசுவனி, வெள்ளை ஈ, துளைப்பான் மற்றும் சிலந்தியை கட்டுப்படுத்த அடிக்கலாம்.

click me!