தண்டு மற்றும் காய் துளைப்பான்
செடி சிறிதாக இருக்கும் போது, இதன் புழுவானது மென்மையான தண்டுகளில் துளையிட்டு, பின்னர் கீழ் நோக்கி குடைந்துக் கொண்டு செல்லும். இதனால் தண்டானது வாடி கீழே தொங்கியும், வளரும் முனைகள் காய்ந்தும் விடும். காய்களில் புழுக்கள் துளைத்து, உட்பகுதியை தின்பதனால், காய் உருமாறி, சந்தை விலையை இழந்துவிடும்.
இலைதத்து பூச்சி
இளம் மற்றும் பெரிய பூச்சிகள், வெளிர் நிறத்துடன் காணப்படும். குறுக்கு வாட்டாக நகர்ந்து செல்லும். பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகி வளைந்து விடும்.அதிக தாக்குதலில் இலை செடிகள் சிவப்பாக மாறி நொறுங்கிவிடும்.
சிவப்பு சிலந்தி
புழு மற்றும் இளம் பூச்சிகள் பழுப்பு நிற சிவப்பினை உடையதாகவும், பெரிய பூச்சிகள் முட்டை வடிவில் காப்பி சிவப்பில் காணப்படும். பூச்சிகள் இலையின் அடிப்புறத்தை தின்று கொஞ்சம் கொஞ்சமாக இலை வளைய தொடங்கி, நொறுங்கிவிடும்.
வேர் முடிச்சு நூற்புழு
இது மைக்ராஸ்கொப்பில் மட்டும் காணப்படக்கூடியது. மண்ணினால் பரவக்கூடியது. மண் உயிரிணம். இவை வேர் பகுதியை உணவாக உட் கொள்ளக்கூடியவை. இதனால் வேர் பகுதியல் முடிச்சுகள் தோன்றும். பாதிக்கப்பட்ட செடிகள் மஞ்சள் இலைகளுடன் வளர்ச்சி குன்றி காணப்படும்.
மஞ்சள் நரம்புத் தேமல் நோய்
நரம்புகள் மஞ்சளாகி, திட்டு திட்டாக பச்சையம் காணப்படும். கடைசியில் இலை முழுவதும் மஞ்சளாக மாறிவிடும். இது வெள்ளை ஈயால் பரவக்கூடியது. பொருளதார சேதத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாகும்.