பூச்சியைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான முறை "பாதுகாப்பு முறை".
** தேவைப்படும் இடங்களில் மட்டும் தேர்ந்தெடுத்த மற்றும் சூழலுக்கு ஒரளவே பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைப் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
undefined
** முடிந்த அளவு பாதிக்கப்பட்ட இடங்களில் சிறு பகுதியாகவோ குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவேண்டும்.
** பாரசிட்டாய்ட்டுகளின் முட்டையைச் சேகரித்து மூங்கிலால் ஆன கூடுகளிலும் மற்றும் பறவை அமரக்கூடிய கூச்சிகள் அமைத்து பாரசிட்டாய்ட்டுகளை வளர்க்க வேண்டும்.
** பூச்சிகள் மற்றும் பயிர் பாதுகாவலன் ஆகியவற்றை பிரித்தரியும் விழிப்புணர்வு மற்றும் தெளிப்பான்கள் பயன்படுத்தும்போது அவற்றை தவிர்த்தல்.
** பூச்சி மற்றும் அவற்றின் எதிர் உயிரிகளின் விகிதம் மற்றும் பொருளாதார வரம்புகளை அறிந்த பின்னர் இரசாயன தெளிப்புகளை கடைசி முயற்சியாகவே கையாளவேண்டும்.
** பல வகையான பூச்சிகளையும் கொல்லும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
** பூச்சி தாக்குதல் அபாயம் உள்ள பகுதிகளில் வேரினை நனைத்தல் அல்லது இள நாற்றுகளை நேர்த்தி செய்ய வேண்டும் .
** ஊடுபயிர் அல்லது பல பயிர்முறைகள் பயிருக்கு பாதுகாவலாக இருக்கும் உயிரினங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.