பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் இந்த இரண்டு முறைகளுக்கும் முக்கியப் பங்குண்டு...

First Published Jun 26, 2018, 1:51 PM IST
Highlights
These two methods are important for controlling the pests ...


பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் இயந்திர மற்றும் மரபியல் முறைகளுக்கு முக்கியப் பங்குண்டு.

1.. இயந்திர முறைகள்

** பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகள், கூட்டுபுழுக்கள், கூடுகள் மற்றும் பாதிப்படைந்த பாகங்களை நீக்கி அழிக்கவேண்டும்.

** மூங்கிலால் ஆன கூடு மற்றும் பறவை அமரக்கூடிய குச்சிகள் அமைத்து பூச்சிகளின் இயற்கை எதிரிகளை ஊக்குவிக்க வேண்டும்.

** ஒளிபொறிகளைக் கொண்டு பூச்சிகளை பிடித்து அழிக்கலாம்.

** கயிறு மூலம் இலைகளில் காணப்படும் புழுக்களை கீழே விழச்செய்து, அவற்றை அழித்தல். உதாரணம். நெல் இலைசுருட்டுப்புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் தேவைப்படும் இடங்களில் பறவைகளைத் அச்சுறுத்தும் அமைப்புகளை நிறுவ வேண்டும்.

** பறவை அமரக்கூடிய குச்சிகள் அமைத்து அவை அவற்றில் அமர்ந்து பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகள், கூட்டுபுழுக்கள், கூடுகளை உண்ணும்படி செய்யவேண்டும்.

** இனக்கவர்ச்சி பொறி கொண்டு பூச்சி இனப்பெருக்கத்தை தடுத்து பூச்சி தாக்குதலின் அளவை கட்டுப்படுத்தலாம். மேலும் பெரிய அளவில் பூச்சிகளை அழிக்கவேண்டும்.

2.. மரபியல் முறைகள்

** பூச்சியை எதிர்க்கும், விளைச்சலை அளிக்ககூடிய, பயிர்வகைகளைத் தேர்ந்தெடுப்பதே மரபியல் முறையில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான டெக்னிக். 

click me!