இதுபோன்ற முறைகளை பயன்படுத்தியும் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்றலாம்...

 |  First Published Jun 26, 2018, 1:50 PM IST
Use such methods and save crops from insect attack ...



** வரப்புகளிலும் வயல் எல்லைகளிலும் பொறி பயிர்களை வளர்க்க வேண்டும். பூச்சிகள் பெரிதும் விரும்பும் இத்தகைய பயிர்கள் பொறி பயிர்கள் எனப்படுகின்றன இத்தகைய பயிர்களை வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் பூச்சிகொல்லிகள் மூலமோ அல்லது அவற்றின் இயற்கை எதிரிகளை ஊக்குவிப்பதன் மூலமோ இவற்றை அழிக்கலாம்.

** வெள்ளை ஈ மற்றும் அசுவினிகளைப் பிடிக்க மஞ்சள் நிறத்திலான ஒட்டுப் பொறிகளை பயிர் உயரத்திற்கு மேல் அமைக்கவேண்டும்.

Latest Videos

** பரந்த நிலப்பரப்பில் ஒரே நேரத்தில் விதைக்க வேண்டும். இத்தகைய கூட்டுமுயற்சியின் மூலம் பூச்சிகளின் பெருக்கத்திற்கு பெரிதும் உதவும் ஒரே சமயத்தில் பல பருவநிலையில் உள்ள பயிர்கள் அமைவது தடுக்கப்படும். மேலும் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்துதலும் எளிது.

** பூச்சி தாக்கக் கூடிய பகுதிகளில், வேரினை நனைத்தல் அல்லது இள நாற்றுகளை நேர்த்தி செய்ய வேண்டும்.

** எங்கெங்கு சாத்தியப்படுமோ அங்கெல்லாம் ஊடுபயிர் அல்லது பல பயிர்முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒரே பூச்சியினம் அனைத்து பயிர்களையும் தாக்காது. மேலும் சில பயிர்கள் அவற்றிற்கு எதிர்ப்பாக செயல்படும். இதன் மூலம் பூச்சி தாக்குதல் குறைந்து, பயிர்களின் பாதிப்பு தவிர்க்கப்படும்.

** அறுவடை செய்யும் போது நிலத்தை ஒட்டி பயிர்களை அறுக்கவேண்டும். ஏனெனில் சிறிது வளர்ந்த நிலையில் உள்ள பூச்சிகள், அடுத்த சாகுபடியின்போது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அடியை ஒட்டி அறுவடை செய்வது அடுத்த போகத்தில் பூச்சித் தாக்குதலை குறைக்கும்.

** பயிர்களை நடுவதற்கு முன் நாற்றுகளை தாமிர /உயிரி பூச்சிகொல்லி கரைசலில் நனைக்கவேண்டும். இது மண் மூலம் வரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.

** பழ மரங்களில் கிளைகளை கத்தரிக்கும்போது அடர்த்தியான, உடைந்த, காய்ந்த, பூச்சி தாக்கிய கிளைகளை நீக்கி அழித்துவிடவேண்டும். இவற்றை பழத் தோட்டத்தில் குவித்து வைக்காதீர்கள் ஏனெனில் இவை பூச்சிகளுக்கு ஆதாரமாக செயல்படும்.

** பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த கிளைகளை வெட்டும்போது ஏற்பட்ட பெரிய வடுக்களை போர்டாக்ஸ் (Bordeaux) பூச்சு கொண்டு மூட வேண்டும்.

click me!