பயோடெக் முறையில் சிறப்பான விவசாயம்…

First Published Nov 26, 2016, 3:09 PM IST
Highlights


என் பெயர் கே.சண்முகநாதன், விவசாயி, மேலதவிட்டுப்பாளையம், காட்டுப்புத்தூர் அஞ்சல், தொட்டியம் தாலுகா, திருச்சி-621 207-ல் இருந்து எழுதுகிறேன்.

தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற விரும்பினாலும் ரசாயன விவசாயத்தில் கிடைக்கும் அதிக விளைச்சலும், பூச்சி, நோய் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வும் இயற்கை முறை விவசாயத்தில் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

மேலும் இயற்கை முறை விவசாயத்தில் வேலை ஆள் தேவையும் உழைப்பும் அதிகம் என்பதும் மிக முக்கிய காரணமாகும்.
எனவே விவசாயிகள் ரசாயன முறையில் பெறும் விளைச்சலையும், பூச்சி நோய்களுக்கு உடனடி தீர்வையும், உயிரி தொழில்நுட்ப முறை விவசாயத்தில் வெற்றிகர ஆலோசனைகளையும் அதற்கான இடுபொருட்களை நேரடியாக வியாபாரிகளின்றி விவசாயிகளுக்கே வழங்குகிறது என தினமலர் விவசாயமலர் மூலம் அறிந்து அந்நிறுவனத்தை தொடர்புகொண்டேன்.
வாழைக்கு ஆரம்பத்தில் தொழு உரத்திற்கு பதிலாக ஏக்கருக்கு 100 கிலோ பயோடைமண்ட் பயன்படுத்தினேன். தற்சமயம் நன்கு மக்கிய தொழு உரம் குறைந்த விலையில் கிடைக்காததால் பயோடைமண்ட் அதே விலையில் வாங்கி பயன்படுத்தலாம்.

இதனால் களை விதைகளையும், பூச்சிநோய் கிருமிகளையும் தவிர்த்துவிடலாம். மேலும் பயோடைமண்ட்-ன் சத்துக்கள் உடனடியாக கிடைத்துவிடுகிறது. ஏனெனில் பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும், ஹார்மோன்கள், என்சைம்கள், அமினோ கந்தகம், துத்தநாக சத்துக்களை மண்ணிலிருந்து பயிருக்கு அளிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் பயோடைமண்ட்-ல் உள்ளன.

ஆனால் பயோடைமண்ட் அதிநவீன உயிரி தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப் படுவதால் ரசாயன உரத்துடன் கலந்து பயன் படுத்தும்போது பாக்டீரியாக்கள் அழிந்துவிடுவதில்லை என்பது பயோடைமண்ட்-ன் தனிச்சிறப்பு.
நாம் எப்போதெல்லாம் ரசாயன உரம் இடுவோமோ அப்போதெல்லாம் அதை பாதியாக குறைத்துக்கொண்டு அதனுடன் பயோடைமண்ட் 10 கிலோ ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு வாழையில் பயன்படுத்தியபோது ஒரு தார் வாழையில் குறைந்தபட்சம் 2 (அ) 3 சீப்புகள் அதிகமாக கிடைத்ததால் பெரிதும் மகிழ்ந்தேன். எனவே எடை கூடி நல்ல லாபம் கிடைத்தது. வருமானம் 30% கூடியது.
இவ்வாறு ஆலோசனைப்படி செய்வதால் சாகுபடி செலவு கூடாமலேயே அதிக விளைச்சல் நல்ல தரத்துடன் கிடைக்கிறது. நான் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து பயன்படுத்தி வருவதைப் பார்த்த விவசாயிகள் காய்கறி, தென்னை, பழ சாகுபடி, பூ சாகுபடிக்கும் பயன்படுத்தி நல்ல பயன் பெறுகின்றனர்.

click me!