மிகுந்த இலாபம் தரும் கோழிக்கொண்டப் பூ…

 |  First Published Nov 17, 2016, 8:07 PM IST



வாசமில்லா விட்டாலும் கண்ணைக் கவரும் விதத்தில் அழகாக இருப்பதால் மாலைகளில் மகுடம் சூட்டப் பயன்படுகிறது கோழிக்கொண்டைப் பூக்கள்.

மதுரை செக்கானூரணி கிண்ணிமங்கலம் கிராமத்தில் பூ சாகுபடி செய்யும் பட்டதாரி குடும்பத்தலைவி விஜிக்கு பிடித்ததும் இப்பூக்கள் தானாம். இனி பூக்களின் வாசமாய் அவர் கூறியது:

Tap to resize

Latest Videos

கோழிக்கொண்டை பூக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா வண்ணங்களிலும் பூக்கின்றன. சிவப்பு ரோஜா மாலைகளில் இடையிடையே இப்பூக்களும் தொடுக்கப்பட்டு, ரோஜா பூவின் தோற்றத்தையும் அந்தஸ்தையும் பெற்று விடுகின்றன.

பல வண்ண மாலைகளில் கண்ணைக் கவரும் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா நிறப்பூக்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவை எட்டு நாட்கள் வரை வாடாமல் இருப்பதும் அதன் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம். நாங்கள் சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களை சாகுபடி செய்கின்றோம்.

மழை, கோடை என இரு பருவத்திற்கும் ஏற்றது. நாங்கள் கீரை சாகுபடி அதிகம் செய்வதால் மழைக்காலத்தில் மட்டும் நடவு செய்கின்றோம். எல்லா மண்ணிலும் எளிதாக வளரும்.

எல்லா சாகுபடியைப் போன்று 4, 5 முறை நிலத்தை நன்றாக உழுவது வழக்கம். அடியுரமாக மாட்டுச் சாணம் சேர்க்கிறோம். ரசாயன உரம் சேர்ப்பதில்லை. மண்ணின் தன்மையை பொறுத்து உழும் முறை மற்றும் எண்ணிக்கையை மாற்றிக் கொள்ளலாம்.
பத்து செடிக்கு குறைந்த பட்சம் 1 – 2 கிலோ வரை பூக்கள் எடுக்கலாம். புழுக்கள் தாக்கத்தின் போது குறைவான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கிறோம்.
பூத்தவுடன் பத்து நாட்களுக்கு ஒரு முறை வீதம் 4 அல்லது 5 முறை பூ பறிக்கலாம்.

பூத்தல் நின்ற பிறகு இவற்றை சுழற்சி முறையில் உரமாக பயன்படுத்தலாம் தரமான பூவிலிருந்து விதைகளைச் சேகரித்து அதனை மறுமுறைக்கு பயன்படுத்துகின்றோம். நாற்று முறையில் வளர்க்க வேண்டும். விதைத்த 5ம் நாளில் தளிர்விடும்.

செடி நட்ட 40 நாட்களில் பூக்கத் துவங்கி விடும். தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் கோடை காலத்தில் செய்யலாம். வறட்சி, கடும்குளிர் இரண்டையும் தாங்கி வளரும்.
10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுகிறோம். குறுகிய நிலத்தில் பயிரிட ஏற்றது. பூ உதிர்தல், நோய் தாக்குதல் அதிகப்படியாக கிடையாது.

உரம், களை எடுத்தல் செலவு இல்லை. பூ பறிப்பது, சாகுபடி செய்வது எளிமையானது. சீசன் நேரங்களில் கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விலைபோகும். சராசரியாக கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை உறுதியாக கிடைக்கும். மதுரை மாட்டுத்தாவணி அல்லது செக்கானூரணி மார்க்கெட்டில் விற்பனை செய்கிறோம். பட்டப்படிப்பு என்பது வெறும் அறிவு தான்.

click me!