நாற்றங்காலை விதைக்கும் முறை
** எப்போதும் நிலப்பரப்பிலிருந்து 10செமி உயரமுள்ள மேட்டுபாத்தி நாற்றாங்காலிலே விதைக்கவும். இதனால் நிர் சரியாக வடிவதால் நாற்றழுகல் வராமல் பாதுகாக்கப்படும்
** ஜுன் மாதத்தில், மூன்று வாரங்களுக்கு நாற்று பாத்தியை 45 காஜ் (0.45மி.மி மொத்தமுடைய பாலீதீன் ஷீட் கொண்டு மூடிவைக்க வேண்டும். இதனால் மணல் வெப்பமூட்டப்பட்டு, மணல் சார்ந்த நோய், பாக்டீரியா வாடல் நோய் மற்றும் நூற்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
** இருப்பினும் வெப்பமூட்டப்படும் போது போதுமான ஈரப்பதம் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் .
** மூன்று கிலோ பண்னை தொழுவுரத்துடன், பூஞ்சானின் எதிரியான ட்ரைகோடெர்மாவை 250 கிராம் கலந்து 7 நாட்கள் வைக்க வேண்டும். இதனை பின்னர் 3 சதுர மீட்டர் நாற்றாங்கால் படுக்கையில் கலக்கவும்.
** F1-321, போன்ற வீரிய இரக விதைகளை ஜூலை முதல் வாரத்தில் விதைக்கலாம். விதைப்பதற்கு முன் விதைகளை, ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் டைக்கோடெர்மா பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
** களைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நாற்று மற்றும் வேண்டாத நாற்று ஆகியவற்றை நீக்க வேண்டும்.