கத்திரியை இவ்வளவு பூச்சிகள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன...

 |  First Published Jun 27, 2018, 2:33 PM IST
Such pest attacks are causing great damage to the brinjal...



கத்திரியை தாக்கும் முக்கியமான பூச்சிகள்...

தண்டு மற்றும் காய் துளைப்பான் :

Latest Videos

undefined

ஆரம்பத்தில் இதனின் புழு தண்டினை துளையிட்டு வளரும் பகுதியை பாதிக்கும். காய்ந்த, தொங்கும் கிளைகளே இதற்கான அறிகுறி. பின்னர் புழு காய்களை துளையிட்டு காய்களை வீணடிக்கும்.

சிகப்பு சிலந்தி :

புழு, சிறிய மற்றும் பெரிய சிலந்திகள் இலையின் அடிப்புறத்தை உணவாக உட்கொள்ளும். பாதிக்கப்பட்ட இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளைந்து, உதிர்ந்து போகும்.

ஹட்டா வண்டு :

வண்டுகள் வெளிர் காப்பி நிறமும் அதன் நடுவே பல கறுப்பு புள்ளிகளுடனும் காணப்படும். புழு மஞ்சள் நிறத்தில் காணப்படும்.முட்டைகள் சுருட்டு போன்றும், மஞ்சள் நிறமாகவும், கூட்டாகவும் காணப்படும், புழு மற்றும் வண்டு, இலைகளின் பச்சையத்தை தின்று இலையை நரம்புபோல் ஆக்கும்.

அசுவனி

இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலையின் சாறை உரிந்து, செடி மஞ்சள் நிறமாக மாறி உருகொலைந்து காய்ந்து இறந்து விடும். இவை தேன் துளிகளை செடியில் இடுவதால் கரும்பூசனம் படிந்து ஒளிச்சேர்க்கையை பாதிக்கும்.

கருகல் நோய் மற்றும் காய் அழுகல் நோய்

இலைகளில் வட்டவடிவிலான காப்பிநிற வட்டங்கள் தோன்றும். வெளிர்நிற உள்வாங்கிய புள்ளிகள் காய்களில் தோன்றும். இது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி முழு காயிலும் பரவும். காயின் உட்புறம் அழுகி விடும்.

சிற்றிலை நோய் 

இலைகள் சிறியதாகி இலைத்தண்டு சின்னதாகி கனுக்கிடை தண்டுகள் சிறுத்து, இலைகள் அகலம் கம்மியாகி, மென்மையாகவும், மஞ்சளாகவும் காணப்படும். செடி புதரை போல் காட்சியளிக்கும். இதில் காய்ப்பு இருக்காது.

கருகல் நோய் :

கிளைகள் கீழ்வாட்டமாக முக்கிய தண்டினை நோக்கி வளைந்து வரும். தாக்கம் அதிகமாகும் போது இனைப்புகளில் பூசனம் கானப்படும். கடைசியில் முழு செடியும் வாடிவிடும்.

வேர் முடிச்சி நூற்புழு :

வேர் பகுதியில் முடிச்சிகள் காணப்படும். செடிகுள்ளமாக காணப்படும். பாதிக்கப்பட்ட நிலத்தில், ஒருசில இடங்களில் மட்டும் செடிகள் அடர்ந்தது குள்ளமாக காணப்படும்.


 

click me!