மாதத்திற்கு 60 கிலோ பழங்கள் தரும் நாவல் மரம்…

 |  First Published Jan 13, 2017, 12:59 PM IST

நாவல் பழத்தின் மூலம் இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்து நிரூபித்து வருகின்றனர்.

ஒரு ஏக்கரில் குட்டை இரக நாவல், பெரிய இரக நாவல் என இரண்டு வகை நாவல் இரகங்கள் உள்ளன.

Latest Videos

undefined

ஒன்றரை ஏக்கரில் 80 செடிகளை 22 அடி இடைவெளியில் நட்டு, சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்க்கலாம். மரமாகும் வரை இயற்கை உரங்களை அளித்தாலே போதும்.

அடுத்த நான்கு ஆண்டுகளில், மரத்திற்கு 5 கிலோ பழம் கிடைக்கும். படிப்படியாக விளைச்சல் அதிகரித்து, 11 வது ஆண்டிலிருந்து மரத்திற்கு 60 கிலோ பழம் கிடைக்கும்.

பொதுவாக, நாவல் மரம் 40 அடி வரை வளரும்; பழங்களை பறிப்பது சிரமமாக இருக்கும். தொடர் கவாத்து செய்தால் மரம் அதிக உயரமாக வளராது. நீங்கள் தரையில் அமர்ந்து கொண்டே பழங்களை பறிக்கலாம்.

ஒவ்வொரு பழமும் 15 கிராம் எடையிலும், தித்திப்பு அதிகமாகவும் இருக்கும்.

ஒவ்வொரு மரத்திலிருந்தும் 60 கிலோ பழங்களை தாராளமாக பறிக்கலாம். கிலோ 150 ரூபாய்க்கு விற்றால் கூட இரண்டு மாதத்தில் 6.75 இலட்ச ரூபாய் சம்பாதிக்கலாம். செலவு போக 6 இலட்ச ரூபாய் கிடைக்கும்.

click me!