வெள்ளாட்டு பால்:
வளர்ந்து வரும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, நமது வருங்காலப் பால் தேவையை நோக்கினால் பால் உற்பத்திக்குப் பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். நமது பெரிய தேவையை வெள்ளாட்டுப் பால் உற்பத்தி மூலம் எட்டிவிட முடியாது. அத்துடன் யாவரும் வெள்ளாட்டுப் பால் உற்பத்தி மூலம் எட்டிவிட முடியாது.
அத்துடன் யாவரும் வெள்ளாட்டுப் பாலை விரும்பி ஏற்பதும் இல்லை. ஆனால் வெள்ளாடு ஏழையின் பசு எனக் கருதப்படுகின்றது. ஏனெனில், பெரிய பசுவைப் பேண முடியாத ஏழைகள் வெள்ளாடுகளை வளர்க்க முடியும். வீட்டுத் தே¨க்குச் சிறிது வெள்ளாட்டுப் பாலை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேல் நாடுகளில் சிறப்பாக பாலுக்காகவே வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் குழந்தைகளின் செவிலித் தாய் எனப்படுகின்றன. ஆட்டுப்பாலில் ஒரு வகை வாடை இருக்கும். இதற்கு முக்கிய காரணம் வெள்ளாட்டுக் கடாக்களை ஆடுகளுடன் சேர்த்து வளர்ப்பதே காரணமாகும்.
கடா வெளியேற்றும் வாடையை ஆட்டுப்பால் உறிஞ்சிக் கொள்வதால், இவ்வகையான வாடை இருக்கின்றது. கடாக்களைத் தனியாகப் பிரித்து வளர்க்கும் போது இப்பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
வெள்ளாட்டுப் பாலின் சிறப்புகள்
வெள்ளாட்டுப்பாலில் உள்ள கொழுப்பும் புரதமும் எளிதில் செரிக்கக் கூடிய தன்மையுடைதால், தாய்பாலுக்கு அடுத்த சிறப்புடையது.
வெள்ளாட்டுப் பாலின் புரத வேறுபாடு காரணமாக வெள்ளாட்டுப் பாலினால் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. பல குழந்தைகளுக்குப் பசும்பால் கொடுக்கும்போது ஒவ்வாமை காரணமாக வயிற்றோட்டமும், பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இச்சூழ்நிலையில் வெள்ளாட்டுப் பால் சிறு குழந்தைகளுக்கு ஏற்றது.
வெள்ளாட்டுப்பால் தேவைப்படும்போது குழந்தைகளுக்குக் கறந்து கொடுக்கலாம். வெள்ளாடுகளில் எப்போது வேண்டுமானாலும் பால் கறந்து கொள்ள முடியும்.
குடற்புண் உள்ள நோயாளிகளுக்கு வெள்ளாட்டுப்பால் அருமருந்து போன்றது.
வெள்ளாட்டுப் பாலால் காச நோய்ப் பிரச்சனை கிடையாது. பொதுவாக வெள்ளாடு காச நோயால் தாக்கப்படுவதில்லை.
வெள்ளாட்டுப்பால் கொழுப்புக் கோளங்கள் சிறியனவாதலால் விரைவில் கெட்டு விடக் கூடியது. ஆகவே விரைந்து பயன்படுத்த வேண்டும். அல்லது காய்ச்சிச் சேமிக்க வேண்டும். மேலும் புருசெல்லோசிஸ் என்னும் நோய்க் கிருமிகளின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் காய்ச்சிக் குடிப்பது நல்லது.
ஏழைகளின் புரதப் பற்றாக் குறையை வெள்ளாட்டுப் பால் தீர்க்கும் ஒரு கருவியாக உள்ளது.