ஆடுகளுக்கு பாக்டீரியாவால் இத்தனை நோய்கள் ஏற்படுகின்றன? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

 |  First Published Dec 6, 2017, 1:07 PM IST
Are the diseases caused by bacteria in the goats? You can read this ...



அடைப்பான்

இந்நோய் கண்ட ஆடுகளில் எந்த விதநோய் அறிகுறிகளும் காணாமல் நோய் தாக்கிய ஒருமணி நேரத்திற்குள்ளாக இறந்துவிடும். சிலசமயம் அதிக காய்ச்சல் காணப்படும்.ஆடு இறந்தவுடன் ஆசனவாய்,மூக்கு,காது போன்ற இயற்கை துவாரங்களிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறும்.இது முக்கியமான அறிகுறியாகும்.இந்நோயை ஆன்டிபயாடிக் மருந்துகொண்டு கட்டுப்படுத்தலாம். நோய்தாக்கும் முன்னர் தடுப்பூசி போடவேண்டும்.

தொண்டை அடைப்பான்

தொண்டை அடைப்பான் நோய் பெரும்பாலும் இளவயது ஆடுகளை மழைக் காலத்தில் அதிகமாக பாதிக்கும்.இந்நோய்க் கிருமிகள் தொண்டையில் எப்பொழுதும் இருக்கும். ஆடுகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகுறையும் போது இந்தக் கிருமிகள் பெருகி நோயை உண்டுபண்ணும். 

நோயுற்ற ஆட்டில் அதிககாய்ச்சல்,நுரையீரல் பாதிப்பால் மூச்சுத்திணறல், மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.காதுகள் தொங்கிவிடும். மூக்கு,வாயிலிருந்து சளி ஒழுகும்.நோயுற்ற 5-7  நாட்களில் ஆடுகள் இறந்துவிடும். 

ஆரம்பகாலத்தில் இந்நோயைக் கண்டுபிடித்தால் ஆன்டிபயாடிக் மருந்துக் கொண்டு எளிதில் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும். நோய் தாக்கும் முன்னர் தடுப்பூசி போட வேண்டும்.

துள்ளுமாரி நோய்

துள்ளுமாரி நோய் எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும்.ஆனால் இளம் வயது ஆடுகளே இந்நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக் காலங்களில்புதிதாக முளைத்த பசுமையான புல்வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும். 

நல்ல திடகாத்திரமான ஆடுகள் இந்நோயினால் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. மழைக்காலத்திற்கு முன் தடுப்பூசிபோட்டு இந்நோய் வராமல் தடுக்கலாம்.

Tap to resize

Latest Videos

click me!