மீன் உபபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டுதல்
மீன் புரத கலவை
ஒரு முழு மீனில் இருந்து கிடைக்கின்ற புரதக்கலவை ஒரு திடப்புரதக்கலவையாகும். மீனிலிருந்து தண்ணீர், எண்ணெய், எலும்புகள், மற்றும் இதர பொருட்களை அகற்றுவதால் மீன் புரதம் அதிகரிக்கிறது.
மீன் புரதக் கலவையின் முன்னேற்றத்தால் முழு மீனிலிருந்து பெறப்படுகின்ற புரதக்கலவை மனிதனின் ஊட்டச்சத்துக்கு ஏற்றது.
மீன் புரதக்கலவை கரகரப்பான, நிறமில்லாத, மனமில்லாத மற்றும் சுவையில்லாத ஓரு தூள்.
இந்த தூளை எந்தவித சுவைமணமும் குறையாமல் அறை வெப்ப நிலையிலே 3-4 வருடங்கள் வைத்திருக்கலாம். ஏறத்தாழ கூட்டான மீன் புரதக்கலவையாக பயன்படுத்தலாம்.
அதிக அளவுடைய உயர்ந்த செரிமான புரதம், லைசின் மற்றும் கனிமம் இவை அனைத்தும் நிறைந்ததுதான் மீன்புரதக்கலவை. (உயர்ந்த ஊட்டச்சத்து நிறைந்தப் பொருள்)
மீன் புரதக் கலவையை நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆதலால் சாப்பிடும் உணவுடன் சோர்த்து சாப்பிட வேண்டும். ரொட்டியில் 5-10% மற்றும் பிஸ்கட்டில் 10% மீன் புரதக் கலவை சேர்ந்துள்ளது.
சராசரியாக ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 35கி மீன் புரதக் கலவையை உணவில் சேர்த்துக்கெரள்ள வேண்டும். மீன் சதையில் 15-20% புரதம் உள்ளது. சில மீன் இனங்களில் அதிகமான எண்ணெய் உடலில் இருக்கும்.(எ.க.சூறா,காட்) இது ஈரல் எண்ணெய்க்கு மூலகாரணம் உள்ளது.
மீன் பதப்படுத்துதல் மற்றம் எலும்பற்ற மீன் துண்டு தொழிற்சாலையில் இருந்து கிடைக்கும் உபயோகமற்ற மீன்களில் நிறைய புரதம், கொழுப்பு மற்றும் கனிமம் உள்ளது.
மீனின் உபபொருட்கள், மீன் உணவு, மீன் தூள், மீன் உடல், மீன் ஈரல் எண்ணெய், பதப்படுத்திய மீன் சுவாசப்பை, இன்னும் பல. ஈரல் மற்றும் நண்டிலிருந்து புற்த்தோட்டின் மூலப்பொருள் கிடைக்கின்றது.
உயிர் வேதியியல் மற்றும் மருந்து சார்ந்த பொருட்கள், பித்த நீர் உப்பு, இன்சுலின், குலுகோசமையின் மற்றும் பல. மீனினுடைய இன்னும் உள்ள உபபொருட்கள் அடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஊன் (எலும்பு) பசை
ஊன் பசை என்பது ஒரு வகை புரதம். இதில் அமினோ அமிலம் ட்ரைப்டோபென் உள்ளது. தானியத்தில் இல்லாத லையிசின் மற்றம் மிதியோனின் இதில் அதிகம் உள்ளது. மீன் சதை மற்றும் எலும்பிலிருந்து இந்த ஊன் பசை எடுக்கப்படுகிறது.
பயன்கள்
உணவு தொழிற்சாலையில் களிம்புக்கு நிலைக்கச் செய்ய, உரையச் செய்ய, கரைக்க மற்றும் கெட்டிப்படுத்த ஊன் பசை பயன்படுகிறது.
இன்சுலின்
இன்சுலின் ஒரு வகை ஹொர்போன் (உட்சுரப்பி). மனிதனுக்கு வரக்கூடிய சர்க்கரை நோயை இன்சுலின் மூலம் கட்டுப்படுத்தலாம். மீன் இன்சுலின் கணைய நீர் சுரப்பியை புரதத்தின் மூலம் பிரிக்கப்படுகிறது.
மீன் வெள்ளைக் கரு
மீன் வெள்ளைக் கரு வெளிப்புற மற்றும் இராசாயன குணங்கள் உள்ள முட்டை கருவை போன்றதே ஆகும். மீன் முட்டைகள் மற்றும் மீன் கழிவுகளிலிருந்து மீன் வெள்ளைக் கருவை பிரித்து எடுக்கலாம்.
பயன்கள்
உணவு மற்றும் மருந்துப் பொருட்களில் ஒழுங்கு நிலையாக்குதல், கரைய வைத்தல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. ஐஸ்கிரிம், சோப்பு தூள், களி, மிட்டாய், ரொட்டி கிடங்கில் மீன் வெள்ளைக்கரு பயன்படுத்தப்படுகிறது.
மீன் துண்டு சார்ந்த பொருட்கள்
மீன் செவில், தோல் மற்றும் எலும்பு இல்லாமல் சதையை மற்றும் மீனிலிருந்து எடுத்து அதை பொடியாக்குதல். மீன்களை சரைத்து அதை துண்டுகளாக்கி அதை பொடி செய்வார்கள்.
இந்த பொடியை வைத்து நிறைய மதிப்பூட்டல் பொருட்களை தயாரிக்கலாம். உரே மீனிலிருந்து இதை எடுப்பதால் மக்கள் இதை முழு மீனுக்கு பதிலாக இந்த முறையை எளிதாக பயன்படுத்துகிறார்கள்.