கீரை
இது ஒரு மாத பயிராகும்.
கீரையை இந்த மாதத்தில் தான் பயிரிட வேண்டும் என்பதில்லை வருடம் முழுவதும் பயிரிடலாம்.
கீரை சாகுபடிக்கு நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்டதாக இருந்தால் போதும் நன்றாக வளரும்.
கீரையை பயிரிட அதிக வெட்பம் இருந்தால் மிக நன்றாக வளரும். சில கீரைகள் மீதமான வெப்பநிலையிலும் வளரும்.
கீரையைப் பயிரிட முதலில் நன்றாக உழவு எடுக்க வேண்டும்.
பிறகு பாத்தி போட்டு சாணி எரிவு போட்டு, கீரை விதையை விதைக்க வேண்டும்.
பிறகு, அதை மண்ணால் மூட வேண்டும். அப்போது மெல்லியதாக மண்ணை நிரப்ப வேண்டும். அதன் பின்னர் தண்ணீர் விட வேண்டும்.
விதைத்தவுடன் பாத்திகளில் தண்ணீரைப்பாய்ச்சும் போது நிதானமாக பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும்.
விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் போல லேசாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
கீரை விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும்.
அதன் பிறகு, விதைத்த 21 நாட்களில் இருந்தே கீரையை அறுவடை செய்யலாம். அதனால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது.
அவ்வளவு தான் இப்போது கீரை வளர்ந்து பின்னர் அதை அறுவடை செய்துக் கொள்ளலாம்.