அலங்கார வளர்ப்பு மீன்கள்
வளர்ப்பு மீன்கள் இனப்பெருக்கத் தன்மையைப் பொறுத்து 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முட்டையிடுவன மற்றும் உள்பொரி முட்டையிடுவன.முட்டையிடும் மீன்கள் பாதுகாப்பாக குறிப்பிட்ட இடங்களில் முட்டையிடுபவை முட்டையைப் புதைத்து வைப்பவை, வாயில் முட்டையைப் பாதுகாப்பவை கூடுகட்டுபவை முட்டையை சுமந்து கொண்டே திரிபவை எனப் பல வகை இனங்கள் உள்ளன.
முட்டையிடுபவை
முட்டையிடும் இனங்களான பார்ப்ஸ் ரேஸ் போராஸ், தங்க மீன், டெட்ராய், டேனியோஸ், பேட்டாஸ், ஏஞ்சல்மீன், கோரமிஸ் போன்றவை உள்ளன. இதில் பார்ப்ஸ் முக்கிய இனமாகும்.
இந்தியாவில் ரோஸி பார்ப், அருளி பார்ப், ஸ்ரைப்டு பார்ப் போன்ற பார்ப்ஸ் இனங்கள் காணப்படுகின்றன. அதேபோல் ஜெயின்ட் டேனியோ, முத்து டேனியோ, ஸெப்ரா டேனியோ போன்ற ஜெய்ன்ட் இனங்களும் மெலிந்த ராஸ் போரா, குளோலைட் ராஸ்பெரா மற்றும் சிஸோர்ட்டெயில் போன்றவை முக்கியமானவை.
மீன் வளர்ப்பிற்குத் தங்க மீன் மிகவும் ஏற்றது.
கோமெட், ஒரண்டா, ரெட்கேப், வெயில் டெய்ல் பபுள் ஐ, போன்ற இரகங்கள் இதில் அடங்கும். இம்மீன்கள் 20 செ. மீ நீளும் வரை வளரக் கூடியவை. 6 செ. மீ நீளம் வளர்ந்த உடன் இனப்பெருக்கம் செய்கின்றன.
டெட்ராஸ் என்பவை 3- 8 செ.மீ நீளம் வரை மட்டுமே வளரக்கூடியவை. இதன் தாயகம் தென் அமெரிக்கா கறுப்பு விடோ டெட்ரா, ஃபிளேம் டெட்ரா, நியோன் டெட்ரா மற்றும் கார்டினல் டெட்ரா போன்றவை அதிகம் வளர்க்கப்படும் இனங்களாகும்.
சைமிஸ் ஃபைட்டர் என பரவலாக வழங்கப்படும் பீட்டா ஸ்பிலென்டர்ஸ் பல நிறங்களில் காணப்படுகிறது. பிற ஆண் மீன்களின் முன்பு இம்மீன்கள் பயங்கரமாகக் காணப்படும்.
கோர்மீன்களில் மூன்று புள்ளி கோர்மி, முத்து கோர்மி, நிலவொளி கோர்மி, பெரிய கோர்மி, மற்றும் முத்தமிடும் கோர்மி போன்றவை முக்கிய இனங்கள்.