இயற்கை உரத்தை பயன்படுத்தி சுற்றுப்புற சூழலையும் காக்கலாம், அதிக விளைச்சலும் பெறலாம்..

 |  First Published Apr 11, 2017, 12:18 PM IST
The ambient environment can also prevent the use of natural fertilizer can be obtained in higher yields



விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்தி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும்.

இயற்கை உரங்களையும் பயன்படுத்தும்போது மண் வளம் காக்கப்படுவதுடன் விளைச்சல் அதிகரிக்கிறது.

Tap to resize

Latest Videos

இயற்கை உரங்கள்:

அ.. யூமிக் அமிலம் (Humic acid)

1.. யூமிக் அமிலம் (Humic acid) என்ற இயற்கை மூலப்பொருளைப் பயிர்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

2.. யூமிக் அமிலம் என்பது பூஞ்சாணம், நிலத்தடிநீர், புதைப் பொருட்களின் சிதைவுகளின் மூலம் உருவாகும் பல அமிலங்கள் சேர்ந்த கலவையாகும்.

3.. யூமிக் அமிலத்தை ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் அமிலத்தை 40 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிப்பான்கள் மூலம் மண்ணில் தெளிக்காலம்.

4.. அதிகாலை அல்லது மாலை நேரங்களில் ஒரு ஏக்கருக்கு 2லிட்டர் அமிலத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான்கள் உதவியுடன் பயிரின் மேல் தெளிக்கவேண்டும்.

5.. மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு யூமிக் அமிலம் உணவாகின்றது.

6.. நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை கரைத்து பயிர்கள் உட்கிரகிக்க ஏதுவாக செயல்படுகிறது.

ஆ.. யூமஸ்

1.. யூமஸ் இயற்கையாகவே மண்ணில் யூமிக் அமிலத்தை உருவாக்கி பயனளிக்கிறது.

2.. யூமிக் அமிலத்தை பயன்படுத்தினால் பயிர்களின் உரத்தேவையை குறைக்கும், அதே சமயம் விளைச்சலை அதிகரிக்கும்.

3.. யூமஸ் நுண்ணுயிரிகள் மண்ணில் வளர உதவுகின்றது.

4.. யூமஸ் பயிர்களின் புரதச்சத்தை அதிகரிக்கிறது.

5.. இது விதைகளின் வீரியம் மற்றும் முளைப்பு திறன் அதிகரிக்கின்றது.

6.. இது பயிர்களை சுகாதாரமாக வளரச்செய்கிறது. பயிர்களின் வறட்சியை தாங்கிக்கொள்ள உதவுகிறது.

6.. யூமஸ் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

7.. இது மண்ணின் வேதியல், உயிரியல் பண்புகளை மாற்றுகின்றது.

8.. இது மண்ணின் நீர் தேக்கும் திறனை அதிகரிக்கின்றது.

9.. பயிர்களுக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணுயிர் சத்தினையும் அதிகரிக்கின்றது.

10.. யூமஸ், ரசாயண உரச்செலவை குறைப்பதுடன் சுற்றுப்புறச் சூழலையும் காக்க உதவுகிறது.

click me!