காரமான மிளகினை உற்பத்தி செய்ய பல வகையான ஊட்டச் சத்துக்கள் தேவை,
இந்த ஊட்டச் சத்துக்களை மண்ணிலிருந்து தாவரங்களின் வேர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளும்,
இப்படி தன்மையை வேர்களுக்கு அளிக்கக் கூடிய நுண்ணுயிர் உரம் தான் வேர் உட்பூசனம்.
இதனை உட்பூசணமாக பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் செயல் திறன், பயிரின் வளர்ச்சி, இனப்பெருக்கத்தின் மூலம் பெருக்கலாம்.
எனவே, மணி, சாம்பல் சத்தைக் கரைத்து பயிர்களுக்கு வழங்குகின்ற வேர் உட்பூசணத்தை மிளகுக் கொடி நடும்போது ஒரு கொடிக்கு 10 கிராம் இட வேண்டும். காய்க்கின்ற தருணத்தில் ஒரு கொடிக்கு 100 கிராம் வீதம் வேரின் அடிப் பகுதியில் வட்டவடிவ குழி எடுத்து இடவேண்டும். அப்படி செய்வதால் மிளகுப்பயிரின் வளர்ச்சி, விளைச்சலை அதிகரிக்கலாம். மேலும், தரமான, காரமான மிளகு விதையினை அறுவடை செய்யலாம்.
வேர் உட்பூசணத்தின் தன்மை:
1.. வேர் உட்பூசணம் தன்னுடைய நூலிழை போன்ற அமைப்பின் மூலம் பரவி மணிச்ததினை கிரகித்து பயிர்களுக்கு அளிக்கின்றது.
2.. வேர்கள் நன்கு வளர்வதால் பயிர்களின் நீர் உறிஞ்சும் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
3.. செடிகளுக்கு வறட்சியை ஓரளவிற்கு தாங்கும் சக்தியைக் கொடுக்கிறது.
4.. எளிதான முறையில் செம்பு, துத்தநாக நுண்ணூட்டச் சத்துக்களை செடிகளுக்கு அளிக்கிறது.
5.. வேர் உட் பூசணம் இடுவதன்மூலம் 20-25 சதவீத மணிச்சத்து இடுவதைக் குறைக்கலாம்.
6.. வேர் உட்பூசணம் பயிர் வேர்ப்பகுதியில் வாழ்வதால் நோயை உண்டாக்கும் நுண்ணுயிர்கள் தாக்குதலிலிருந்து பயிரைக் காக்கிறது.
7.. மண்ணின் வளமும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.