பருத்தி மற்றும் மக்காசோள சாகுபடியில் அதிக மகசூல் பெற இந்த யுக்தியை விவசாயிகள் பயன்படுத்தலாம்.
மக்காசோளமும், பருத்தியும் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூடுதல் மகசூலை பெற்று அதிக லாபம் பெற வேண்டும் என்று எண்னம் இருக்கும்.
ஆனால், மாநில சராசரி விளைச்சலை விட குறைவான மகசூலே கிடைப்பதால் சோர்வடைந்து விடுவர்.
எனவே, “ஒரு ஏக்கர் பரப்பளவில் அதிக பயிர் எண்ணிக்கை பராமரிப்பதன் மூலம் கூடுதல் மகசூலும், அதிக வருவாயும் எடுக்க முடியும்”.
பருத்தி:
பருத்தியில், செடிக்கு செடி 2 அடி இடைவெளியும், அடுத்த வரிசை 4 அடியும், அடுத்த வரிசை 2 அடியும் விட்டு நடவு செய்ய வேண்டும்.
ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்து, அதிக பயிர் எண்ணிக்கையை பராமரித்து கூடுதல் வருவாய் பெறலாம்.
மக்காச்சோளம்:
மக்காசோள சாகுபடியில் வரிசைக்கு வரிசை 2 அடியும், செடிக்கு செடி ஒன்றரை அடி விட்டு ஒரு குழியில் இரண்டு விதை நடவு செய்தால், அதிக பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.
இதன்மூலம், இரட்டிப்பு வருவாய் உறுதி. எனவே, பருத்தி மற்றும் மக்காசோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த யுக்தியை கடைப்பிடித்து அதிக மகசூல் பெறலாம்.