மக்காச்சோளப் பயிரில் ஏற்கனவே சாதாரண ரகம் உள்ளது. இதன் தட்டைகள் கறவை மாடுகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மக்காச்சோளக் கதிர்கள் உலர்த்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வந்தது.
தற்போது வீரிய ஒட்டு மக்காச்சோளம், நெல் சாகுபடியுடன் செய்யப்படுகின்றது.
ஒரு போகம் வீரிய ஒட்டு மக்காச் சோளத்தையும் மற்றும் ஒரு போக நெல் சாகுபடி விவசாயிகள் செய்கின்றனர் விவசாயிகள்.
இந்த ரக மக்காச்சோளத்தை பயிரிட தேவைப்படும் வேலை ஆட்கள் மிகவும் குறைவு.
இயந்திரங்கள் மூலம் உழவு, விதைப்பு மற்றும் அறுவடை செய்யப்படுகின்றது.
வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை மிகக் கொடிய பூச்சி, நோய் தாக்குவது இல்லை.
மிகவும் கெட்டியான மண், அதில் வடிகால் வசதி இல்லாத நிலத்தை விட்டு மண் நல்ல வடிகால் வசதியுள்ள இடத்தில் விவசாயிகள் வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை சாகுபடி செய்யலாம்.
எள், உளுந்தை விட வீரிய ஒட்டு மக்காச்சோளம் அதிக பலனைத் தரும். காரணம் எள், உளுந்து சாகுபடியில் பூச்சி, வியாதி தாக்கினால் அவைகளை அழிக்க செலவு மிக அதிகம்.
தண்ணீர் வராத நிலையிலும் வீரிய ஒட்டு மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம். நல்ல வருவாயையும் பெறலாம்.
வடிமுனை தண்ணீர் கிடைத்ததால் வீரிய ஒட்டு மக்காச்சோளத்தில் நல்ல வருவாயினை விவசாயிகள் பெறலாம்.
தமிழகத்திற்கு மக்காச் சோளத் தேவை அதிகம். விவசாயிகள் வெளி மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தற்போது மக்காச்சோளத்தை தாங்களே சாகுபடி செய்து லாபத்தை இங்கேயே அடையலாம்.
வீரிய ஒட்டு மக்காச்சோளத்தின் வயது 100-110 நாட்கள். கோடையில் விவசாயிகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15க்குள் சாகுபடி செய்யலாம்.
குறுவை சாகுபடி சமயம் மே 15 தேதியில் இருந்து ஜூன் 7ம் தேதி வரை சாகுபடி செய்யலாம்.
இதன் மகசூலை வைத்து கிட்டதட்ட 1 லட்சத்து 70 ஆயிரம் வரை நிகர லாபம் அடையலாம்.