காய்களை தாக்கி பெருத்த சேதத்தை உண்டாகும் பூச்சி…

First Published Apr 11, 2017, 12:07 PM IST
Highlights
Insect damage caused by hitting the pieces


புடலங்காய், பூசணி, வெள்ளரி, தடியன்காய், பீர்க்கன்காய் போன்ற காய்களை தாக்கும் மிகவும் கொடிய பூச்சி “சிவப்புபூசணி வண்டு”.

இந்த பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:

1.. வண்டுகள் இலைகள், பூக்கள் போன்றவற்றில் வட்டவடிவமான துவாரங்களை உண்டுபண்ணி, திசுக்களை கடித்து உண்டு சேதம் விளைவிக்கின்றன.

2.. இளம் செடிகளில் வண்டுகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.

3.. தாக்குதல் அதிகமாக இருக்கும்போது இலைகள் எல்லாம் வண்டுகளால் துளைக்கப்பட்டு சேதப்படுத்தப் படுவதால் செடிகள் மடிந்துவிடக்கூடும்.

4.. வளர்ந்த செடிகளின் இலைகளில் அனேக துவாரங்கள் உண்டுபண்ணினாலும் அவை மடிந்துவிடுவதில்லை. ஆனால் செடியின் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கப்படுகிறது.

5.. மண்ணில் இருக்கக்கூடிய புழுக்கள் செடிகளின் வேர்களைக் கடித்து, உண்டு சேதம் விளைவிக்கும். அவை மண்ணில் வந்து தொடும் காய்களையும் துளைத்து உட்புறத்திலுள்ள சதைப்பகுதியை உண்டு சேதம் விளைவிக்கக் கூடியவை.

இந்த பூச்சியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

1.. நிலத்தை நன்கு உழுது, கூண்டுப் புழுக்களை வெளிக் கொண்டுவந்து அழிக்கலாம்.

2.. கை வலை பயன்படுத்தி, பூச்சிகளைப் பிடித்து அழிக்கலாம்.

3.. தாக்கப்பட்ட காய்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும்.

4.. நிலத்தில் உள்ள களைகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.

5.. ஏக்கருக்கு மாலத்தியான் 400மில்லி வீதம் 400 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

6.. பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படும் செடியின் பாகங்களை அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும்.

click me!