தட்டைப்பயிர்
வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும்.மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்
பச்சைப்பயிறு
வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும். மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மனண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்
ஆமணக்கு
அமில நிலங்களைத் தவிர பிற நிலங்களில் பயிரிடலாம். நாட்டுக் கலப்பையினால் இரண்டு மூன்று தடவை உழவேண்டும்.
எள்
மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இருமுறை டிராக்டர் கலப்பையால் (அ) மூன்று முறை இரும்பு கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்.
மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக் கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இரு, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு போடவேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும்.
நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும். நெல் சாகுபடிக்கு பிறகு எள் போடும் நிலமானது சரியான ஈரப்பதத்தில் ஒரு முறை உழுதபின், விதை விதைத்த பிறகு மற்றொரு உழவினால் மூடவேண்டும்.
நிலக்கடலை
மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக்கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவேண்டும்.
உளிக்கலப்பையைக் கொண்டு மண் கடின அடுக்கை உடைத்தல் குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு உடைய நிலத்தை உளிக்கலப்பையைக் கொண்டு 50 செ.மீ இடைவெளியில் ஒரு திசையில் உழவேண்டும்.
பின்னர் அதற்கு நேர் எதிர் திசையில் உழவேண்டும். இவ்வாறு 3 வருடத்திற்கு ஒரு முறை செய்யவேண்டும். பின்னர் 12.5 டன் தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும்
பேய் எள்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்.
குசும்பா
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்
நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழுஉரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன்னால் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன்பு தொழு உரத்தை இட்டு மூடவேண்டும்