1.. வான்கோழி முட்டை
** வான்கோழிகள் 30 ம் வாரம் முட்டையிட ஆரம்பித்து தொடர்ந்து 24வாரங்கள் (54 ம் வாரம்) வரை முட்டையிடும்.
** போதுமான தீவனம் மற்றும் செயற்கை முறையில் வெளிச்சமளிக்கும் போது வான்கோழிகள் வருடத்திற்கு 60 லிருந்து 100 முட்டைகள் வரை இடும்
** 70 சதவிகித வான்கோழிகள் முட்டைகளை பிற்பகலில் தான் இடும்.
** வான்கோழி முட்டைகளின் வெளிப்புறத்தில் பொட்டுகள் போன்று காணப்படும். ஒரு வான்கோழி முட்டையின் எடை 85 கிராம் இருக்கும்.
** வான்கோழி முட்டையின் ஒரு முனை கூர்மையாவும் அப்பகுதியில் முட்டையின் ஓடு தடிமனாகவும் இருக்கும்.
** வான்கோழி முட்டையில், 13.1 சதம் புரதம், 11.8 சதம் கொழுப்பு, 1.7 சதம்மாவுச்சத்து மற்றும் 0.8 சதம் தாது உப்புகளும் இருக்கின்றன. அது போக,முட்டையின் ஒரு கிராம் மஞ்சள் கருவில் 15.67 லிருந்து 23.97 மில்லிகிராம் கொலஸ்டிராலும் இருக்கிறது.
2.. வான்கோழி இறைச்சி
வான்கோழி இறைச்சியில் கொழுப்பு அதிகம் இல்லாததால் மக்கள் இதனை பெரிதும் விரும்புகின்றனர். வான்கோழி இறைச்சியில் 24 சதம் புரதம், 6.6சதம் கொழுப்பு மற்றும் நூறு கிராமில் 160 கலோரி எரிசக்தியும் உள்ளன.
** மேலும் தாது உப்புகளான பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம்,இரும்புச்சத்து, செலினியம் மற்றும் சோடியம் ஆகியனவும் உள்ளன. உடலுக்கு அவசியமாக தேவைப்படும் அமினோ அமிலங்களும் வைட்டமின்களான நியாசின், பி6 மற்றும் பி12 ஆகியனவும் வான்கோழி இறைச்சியில் அதிகமாக உள்ளன.
** அது மட்டுமன்றி, உடலுக்குத் தேவைப்படும் முழுமையடையாத கொழுப்பு அதிகமாகவும்,கொலஸ்டிராலின் அளவு குறைவாகவும் இருக்கிறது.
** ஒரு வியாபார ஆராய்ச்சியின்படி, 10 முதல் 20 கிலோ உடல் எடையுள்ள 24வார வான்கோழி சேவல் ஒன்றை வளர்க்க ஆகும் செலவு ரூ.300 லிருந்து ரூ400 வரை. அதே வான்கோழியினை விற்பனை செய்வதன் மூலம் ரூ.500லிருந்து 600 வரை லாபம் கிடைக்கும்.
** இதே போன்று, அதே 24 வார வயதுடைய வான்கோழி பெட்டை ஒன்றை விற்கும் போது ரூ.400 லிருந்து 600 வரை லாபம் கிடைக்கும்.