பொதுவாக வான்கோழிகளுக்கு ஏற்படும் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும்...

 |  First Published Feb 20, 2018, 1:27 PM IST
Generally diseases of the turkeys and their remedies ...



வான்கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தீர்வுகள்

1.. அரிசோனியாசிஸ் நோயின் அறிகுறிகள்

பொதுவாக 3-4 வார வயதுடைய குஞ்சுகள் இந்நோய்த் தாக்குதலுக்குள்ளாகின்றன. பாதிக்கப்பட்டகுஞ்சுகள் கண்கள் பாதிக்கப்பட்டு குருடாதல்.

நோய்த்தடுப்பு முறைகள்

இந்நோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளை இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. மேலும் குஞ்சுப்பொரிப்பகங்களை புகைமூட்டம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

2.. நீலக்கொண்டை நோயின் அறிகுறிகள்

சோர்வடைதல், எடை குறைதல், நுரையுடன் கூடிய தண்ணீர் போன்ற கழிச்சல், தலை மற்றும் தோல் கருத்துப்போதல்.

நோய்த்தடுப்பு முறைகள்

பண்ணையினை காலி செய்து கிருமி நீக்கம் செய்தல். பண்ணையில் சிறிதுகாலத்திற்கு வான்கோழிகளை வளர்க்காமல் இருத்தல்.

3.. நீண்ட நாட்களாக இருக்கும் சுவாச நோய் நோயின் அறிகுறிகள்

இருமல், தும்மல் மற்றும் மூக்குத்துவாரங்களிலிருந்து சளி வடிதல்.

நோய்த்தடுப்பு முறைகள்

மைக்கோபிளாஸ்மா தொற்று  இல்லாத வான்கோழிகளை வாங்கி வளர்த்தல்.

4.. எரிசிபிலேஸ் நோயின் அறிகுறிகள்

திடீர் இறப்பு, தாடி வீக்கம், முகப்பாகங்கள் நிறம் மாறுதல், தலை தொங்கி விடுதல்.

நோய்த்தடுப்பு முறைகள்

தடுப்பூசி அளித்தல்.

5.. கோழி காலரா நோயின் அறிகுறிகள்

வான்கோழிகளின் தலை இளஞ்சிவப்பு நிறமாதல், பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த கழிச்சல், திடீர் இறப்பு.

நோய்த்தடுப்பு முறைகள்

சுகாதாரமான பண்ணை பராமரிப்பு மற்றும் இறந்த வான்கோழிகளை முறையாக அகற்றுதல்.

click me!