வான்கோழிகளுக்கு இதுபோன்ற நோய்களும் ஏற்படுவது வழக்கம்...

 |  First Published Feb 20, 2018, 1:28 PM IST
These diseases are also common for turkeys.



1.. கோழி அம்மை நோயின் அறிகுறிகள்

வான்கோழிகளின் கொண்டை மற்றும் தாடிகளில் சிறிய மஞ்சள் நிறகொப்புளங்கள் உண்டாகி பின்பு அது காய்ந்து புண் உண்டாகுதல்.

நோய்த்தடுப்பு முறைகள்

தடுப்பூசி அளித்தல்.

2.. இரத்தக்கழிச்சல் நோயின் அறிகுறிகள்

ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டு வான்கோழிகள் இறத்தல்.

நோய்த்தடுப்பு முறைகள்

தடுப்பூசி.

3.. இன்பெக்சியஸ் சைனோவைட்டிஸ் நோயின் அறிகுறிகள்

வான்கோழிகளின் கால் முட்டிகள் மற்றும் பாதம் வீக்கம், நொண்டுதல்,நெஞ்சுப்பகுதியில் கொப்புளங்கள் தோன்றுதல்.

நோய்த்தடுப்பு முறைகள்

நோய்த்தொற்று இல்லாத பண்ணைகளிலிருந்து வான்கோழிகளை வாங்குதல்.

4.. இன்பெக்சியஸ் சைனுசைட்டிஸ் நோயின் அறிகுறிகள்

மூக்கிலிருந்து சளி வடிதல், இருமல்.

நோய்த்தடுப்பு முறைகள்

நோய்த்தொற்று இல்லாத பண்ணைகளிலிருந்து வான்கோழிக்குஞ்சுகளைவாங்குதல்.

5.. மைக்கோடாக்சிகோஸிஸ் நோயின் அறிகுறிகள்

கல்லீரல் இரத்தத் திட்டுக்களுடன் வெளிறி கொழுப்பு படிந்து காணப்படுதல்.

நோய்த்தடுப்பு முறைகள்

பூஞ்சைகளால் தீவனம் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

click me!