சின்ன வெங்காயம் பயிரிட்டால் 2 மாசத்துல ஒன்றரை இலட்சம் லாபம் வரும்…

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
சின்ன வெங்காயம் பயிரிட்டால் 2 மாசத்துல ஒன்றரை இலட்சம் லாபம் வரும்…

சுருக்கம்

small onions cultivated a hundred and become profitable 2 month

மரவள்ளி, மிளகு, பாக்கு, தேக்கு, காபி என பல பயிருங்க இருந்தாலும், குறைஞ்ச காலத்துல ஜாக்பாட் அடிக்கிற சின்ன வெங்காயத்துக்கு ஈடான பயிரு வேற ஒண்ணும் இல்லிங்க!

மத்த காய்கறி பயிருங்கள பொறுத்த வரைக்கும் அறுவடை பண்ணின உடனே வித்திடணும். ஆனா, சின்ன வெங்காயத்த வச்சிருந்து விக்கலாம். அழுகிப்போயிருங்கற கவல கிடையாது.

விதைச்ச 55 நாளுல இந்த சின்னவெங்காயத்துல பணம் பாத்துடலாம்.

சின்னவெங்காயத்த மே மாசத்துல இருந்து ஆகஸ்ட்டுக்குள்ள பயிர் பண்ணினோமுன்னா 55 நாளுல அறுவடை பண்ணிடலாம்.

மேல தாண்டுச்சுன்னா பங்குனிப்பச்சை விழுந்து இழுத்துக்கிட்டு கிடக்கும்.

55 நாளுக்கு மேல தாண்டி அறுவடைக்கு 65 நாள் வரை கூட ஆயிடும்.

வெயில் அடிச்சா சீக்கிரம் அறுவடை. மழை பெஞ்சதுன்னா கசங்கிக் கசங்கி தானுங்க அறுவடைக்கு வரும்.

1 1/2 ஏக்கர்ல வெங்காயம் பயிர் செய்தால் வெங்காயத்துக்கு செய்த செலவுல விதை வெங்காயத்துக்குத்தான் அதிகமுன்னு சொல்லணுமுங்க.

ஒரு ஏக்கர் விதைக்க 700 கிலோ சின்ன வெங்காயம் தேவைப்பட்டதுங்க. விதை வெங்காயம் கிலோ 27 ரூபாய்க்கு வாங்குனேனுங்க. மொத்தமா 1 1/2 ஏக்கருக்கு 1050 கிலோ விதை சின்னவெங்காயம் தேவைப்பட்டது. அதுக்கே 28000 ரூபாய் செலவாச்சுது.

வெங்காயத்துல நல்ல மகசூல் எடுக்கணுமுன்னா, உரத்த ஏத்திக் கொடுக்கணுங்க. இது குறுகிய காலப் பயிருங்கறதுனால 20:20 மிகச் சிறந்த உரமுங்க. ஏக்கருக்கு 2 மூட்டை போட்டேன். பல்லு பிரியும்போது “ஜிப்ரலிக் ஆசிட்” பயிர் ஊக்கியை 2 டேங்குக்கு 1 கிராம் என்ற கணக்குல ஸ்பிரே பண்ணுனேனுங்க.

களைய கட்டுப்படுத்த “ஆக்ஸிகோல்டு” (Oxyflurofen) ஒரு டேங்குக்கு 30 மி.லி கணக்குல வச்சி தெளிச்சதுனால விதைச்ச 30 நாள் வரைக்கும் களை அண்டல. ஆனால் இந்தக் களைக் கொல்லி படருகிற இலைகளை மட்டும்தான் கட்டுப்படுத்தும். அருகு, கோரையை சீண்டாது. இதை நட்ட 3 வது நாளுல அடிக்கணும். 35 வது நாள்ல ஒரு கை களையும் எடுத்தேனுங்க.

சின்னவெங்காயத்துக்கு ரொம்ப பவரான களைக் கொல்லிய அடிக்கக் கூடாது. அடிச்சா வெங்காயம் செத்துடும். மொத்தத்துல 1 1/2 ஏக்கர் விவசாயம் பண்ணதுல 5880 கிலோ மகசூல் கிடைச்சதுங்க. சராசரியா கிலோ ரூபாய் 30ன்னு வித்ததுல, 1 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது. அதுல செலவு ரூபாய் 55,000 கழிச்சுப்புடுங்க. 2 மாசத்துல 1 1/2 ஏக்கர்ல 1 1/2 லட்சம் லாபம் கொடுக்கிற ஒரே பயிர் சின்னவெங்காயம் தாங்க” என்கிறார் விவசாயி திருமணி.

PREV
click me!

Recommended Stories

Kitchen Garden: மளிகை செலவு இனி பாதிதான்! கோடையில் இந்த 10 காய்களை ஈஸியா வளர்க்கலாம்!
Succulent Plants: உங்க வீட்டுக்கு ஒரு Luxury Villa லுக் வேண்டுமா? இந்த 5 செடிகளை வையுங்க!