கோழிகளைத் தாக்கும் வைரஸ் நோய்களுக்கு மூலிகை மருத்துவம்…

 |  First Published Mar 14, 2017, 11:51 AM IST
Herbal Medicine for virus diseases of chickens ...



நச்சுயிரிகள் அல்லது வைரஸ் கோழிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். இவை சில சமயங்களில் கோழிப் பண்ணையில் உள்ள கோழிகளை மொத்தமாக அழித்து விடக் கூடும்.

இந்த நோய் நாட்டுக் கோழிகளையும் தாக்கத்தான் செய்கிறது. ஆனால் நம் வீட்டிலுள்ள மூலிகைகளின் மூலமாகவே நச்சுயிரிக்கு எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி நாட்டுக் கோழிகளை காப்பாற்றி விடலாம்.

Tap to resize

Latest Videos

முக்கியமான சில வைரஸ் நோய்களையும் அதற்கான பரிகாரங்களையும் அளித்துள்ளோம்.

1.. வெள்ளைக் கழிச்சல் நோய்

வெள்ளைக் கழிச்சல் நோயும் பல கோழியினங்களைத் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு நச்சுயிரி நோயாகும்.

முதல் வாரத்திலும் அதைத் தொடர்ந்தும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு தடுப்பு செய்ய வேண்டும்.

நோய் கண்ட நிலையில் கீழ்கண்ட மூலிகை மருத்துவம் பயன்படுத்தலாம்.

தேவைப்படும் மூலிகை மருந்துப் பொருட்கள் (10 கோழிகளுக்கு)

துளசி – 10 கிராம்

கீழாநெல்லி -10 கிராம்

மிளகு – 5 கிராம்

வெங்காயம் – 5 பல்

மஞ்சள் தூள் – 5 கிராம்

பூண்டு – 5 பல்

சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும்.

மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக வாய்வழியாக உட் செலுத்த வேண்டும்.

2. கோழி அம்மை நோய்

கோழி அம்மை நோய் எல்லாக் கோழியினங்களையுமே தாக்கும் ஒரு நச்சுயிரி நோயாகும்.

நோய் கண்ட நிலையில் மூலிகை முதல் உதவி மருத்துவம் நல்ல பலன் தரும்.

தேவைப்படும் மூலிகை பொருட்கள் (10 கோழிகளுக்கு)

பூண்டு – 10 பல்

மஞ்சள்தூள் – 10 கிராம்

துளசி – 10 கிராம்

சூடம் – 10 கிராம்

வேம்பு இலை – 10 கிராம்

சின்ன சீரகம் – 10 கிராம் (இடித்து சலித்தது)

வெந்தயம் – 5 கிராம்

மேற்கண்ட பொருட்களை நன்கு அரைத்து அக்கலவையுடன் விளக்கெண்ணெய் – 100 மி.லி மற்றும் வேப்ப எண்ணெய் – 100 மி.லி சம அளவில் கலந்து சிறிது சூடு காட்டி பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும்.

மேலும் வாய் மூலமாகவும் கீழ்கண்ட பொருட்களை உட்செலுத்த வேண்டும்.

சின்ன சீரகம் – 10 கிராம்

பூண்டு – 5 பல்

மஞ்சள் – 5 கிராம்

வேப்பிலை – 10 இலைகள்

மிளகு – 5 எண்ணிக்கை

துளசி – 10 இலைகள்

வெந்தயம் – 5 கிராம்

மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும்.

மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உள்ளே செலுத்த வேண்டும்.

click me!