1.. இளங்கன்றுக் கொட்டில்கள்
** இளங்கன்றுகளுக்கு நல்ல சுத்தமான காற்று மிக அவசியம். எனவே அவற்றை மாட்டுக் கொட்டகையில் வளர்க்காமல் தனி கொட்டிலில் நல்ல வெளிச்சமும் சுகாதாரமான காற்றும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம்.
** மேலும் சிறந்த பாரமரிப்பிற்கு கன்றுகளை பிறந்த இளங்கன்றுகள், காளைக் கன்றுகள். கிடாரி (பெண்) கன்றுகள் என்று வகைப்படுத்தி வேறுவேறு கொட்டிலில் வளர்த்தல் நலம்.
** கன்றுக் கொட்டில் தாய் மாடுகளின் கொட்டகை அருகே இருக்க வேண்டும்.
** ஒவ்வொரு கன்றுக் கொட்டிலின் அருகே ஒரு திறந்த புல்வெளி இருத்தல் நலம்.
** குறைந்தது 100 ச.அடியாவது 10 கன்றுகளுக்குத் தேவை. ஒரு வயதிற்குட்பட்ட கன்றுகளை 3 பிரிவாகப் பிரித்து இடங்களை ஒதுக்கலாம்.
** 20-25 ச.அடி மூன்று மாதம் வயதுள்ள கன்றுகளுக்கு, 25-30 ச.அடி 3 லிருந்து 6 மாத வயதுள்ள கன்றுகளுக்கு, 30-40 ச.அடி 6 லிருந்து 12 மாத வயதுள்ள கன்றுகளுக்கு, 40-45 ச.அடி ஒரு வருடத்திற்குமேற்பட்ட கன்றுகளுக்கு இவ்வாறு பிரித்து கன்றுகளுக்கு புல்வெளியில் இடமளிப்பதன் மூலம் கன்றுகள் சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வளரும்.
** புல்வெளியில் அங்கங்கே தண்ணீர் தொட்டிகள் அமைத்தால் சுத்தமான நீரையும் கன்றுகளுக்கு அளிக்க முடியும்.
2.. எருதுகளின் கொட்டில்கள்
** எருதுக் கொட்டில் அமைக்கும்போது கவனிக்க வேண்டியது கையாள்வதற்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
** கரடுமுரடான தரையில் எருதுகளின் கால்கள் நகங்கள் கீரி காயம் உண்டாவதுடன் அதன் இனவிருத்தத் திறனும் குறைந்துவிடும். எனவே கான்கிரீட் சிமென்ட் தளத்தாலான சமமாண தரை அவசியம்.
** மேலும் 15 / 10 பரிமானம் கொண்ட நல்ல காற்று மற்றும் வெளிச்சத்துடன் கூடிய அறையில் தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகள் இருக்க வேண்டும்.
** முடிந்தவரை எருதுக்கு தீவனம் வெளியில் இருந்து வழங்குமாறு கொட்டில் அமைக்கவேண்டும். சுற்றுச் சுவரானது எருது தாண்ட முடியாத அளவு 2” அளவும் உள்ளே எருது சுதந்திரமாக உலவுமாறு இருக்க வேண்டும்.
** அதேசமயம் எருது மற்ற கால்நடைகளைப் பார்க்க இயலுமாறு அமைத்தல் அதன் தனிமையைக் குறைக்க உதவும். இனவிருத்தி செய்யும் இடத்திற்க்குப் பக்கத்தில் அமைத்தல் சிறந்தது.