சுவர்கள் மற்றும் கூரைகள்
கொட்டகையின் உட்புரச் சுவர் சீராக சிமென்ட் கொண்டு பூசப்பட்டதாக இருக்க வேண்டும். அது வெளிப்புற தூசிகளையோ அல்லது ஈரப்பதத்தையோ உள்ளே அனுமதிக்காதவாறு இருக்க வேண்டும். 4 லிருந்து 5 அடி வரை உயரமுள்ள குட்டையான சுற்றுச்சுவரும் கூரையானது இரும்புத் துண்களால் தாங்கப்பெருமாறு அமைத்தால் தூண்களின் இடைவெளியில் காற்று தாங்கப்பெருமாறு ஏற்றதாக இருக்கும்.
undefined
கூரை
கூரை ஓடுகள் அல்லது ஏஸ்பஸ்டாஸ் (asbestos) கொண்டு வேயப்படுதல் நலம். அல்லது அலுமினியம் பூசப்பட்ட இரும்புத் தகரங்களையும் பயன்படுத்தலாம். வெறும் இரும்புத் தகரங்களை விட இது சூரிய ஒளியை எதிரொளித்து கொட்டகையின் உள்ளே சீரான வெப்பத்தைத் தருகிறது. 8 அடி உயரமும் பக்கங்கள் 15 அடி அளவுள்ள கொட்டகையில் காற்று போதுமான அளவு கிடைக்கும். ஒரு கறவை மாட்டிற்கு 800 கியூபிக் அடி அளவு காற்றானது தேவைப்படுகிறது.
தீவனத்தொட்டி
கான்கிரீட் சிமென்ட் தளத்தாலான வெளியேற்றும் அமைப்புடன் கூடிய தீவனத் தொட்டிக்குள் பராமரிப்புக்கு ஏற்றவையாக இருக்கும். சின்ன தொட்டியாக இருந்தால் 1்-4் உயரமும் பெரியதெனில் 6்-9் உயரமும் போதுமானது. பசுவைப் பொறுத்தவரை சின்ன தொட்டிகளே (low front manger) போதுமானது என்றாலும் பெரியதாக இருந்தால் தீவனம் அதிகஅளவு வீணாகாமல் தடுக்கலாம்.
கழிவு நீர் வடிகால்
இரண்டி அடி அகலமுள்ள சாணி, மற்றும் சிறுநீர் எளிதில் வந்து விழுமாறு தேவையான இறக்கத்துடன் இருக்க வேண்டும். அதேசமயம் மாட்டின் பின் சற்று இடைவெளியுடன் எளிதாக கழிவுகள் வெளியேறுமாறு அமைத்தல் அவசியம்.
கதவுகள்
கதவுகள் திறக்கும்போது சுவர் வரை விரிந்தி திறக்குமாறு இருக்க வேண்டும். மாடுகள் ஒரு வரிசைமுறையில் கட்டப்பட்டிருப்பின் கதவு அளவு 5” அகலம் மற்றும் 7” உயரம் கொண்டதாகவும் அதுவே இரு வரிசையெனில் அகலம் 8” ற்குக் குறைவாக இருக்க கூடாது.
கன்று ஈனும் இடம்
பால் கறக்கும் இடத்தில் கன்று ஈன அனுமதித்தல் மிகவும் தவறு. கன்று ஈனுவதற்கென்று சுற்றுச் சுவருடன் கூடிய நல்ல காற்றோட்டமான படுக்கை வசதியுடன் கூடிய தனியறை இருப்பது அவசியம். அது 100 லிருந்து 150 சதுர அடி இருக்க வேண்டும்.
நோய் பராமரிப்புக் கொட்டகை
ஏதேனும் நோய் தாக்கினால் தாக்கப்பட்ட மாடுகளை தனித்தனிக் கொட்டகையில் மற்ற மாடுகளிலிருந்து பிரித்து வைக்க வேண்டும். அதற்கென 150 சதுர அடிகொண்ட கொட்டில்கள் அமைத்தல் நலம். இக்கொட்டில்கள் மாட்டுக் கொட்டகையிலிருந்து சிறிது தொலைவில் அமைத்தல் வேண்டும். ஒவ்வொரு கொட்டிலும் சரியான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும்.
தரைப்பகுதி
கொட்டகையின் உட்பக்கத் தரையானது வழுக்கக் கூடியதாக இல்லாமல் அதேநேரம் ஈரத்தை உறிஞ்சாமல் எளிதில் உலரக் கூடியதாக இருத்தல் வேண்டும். நீண்ட திண்டு சிமென்ட் கான்கிரீட் தளங்கள் மிகவும் ஏற்றவை.